பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

பாரிதனில் பைந்தமிழ்ச்சீர்

பறிக்கவந்த இந்தியெனும் பகையைத் தள்ளி மூரி நிமிர்ந் தரிமாவாய்

முழங்கிஅதன் முதுகெலும்பை முறிக்கும் பாங்கில் வாரிவிட்ட "இந்திபொது

மொழியா'என் றோர்உரையால் வதைத்த செம்மை விரியத்தால் மறைமலையே, -

ஆண்மையதன் மறையாத மலை நீர் என்பேன்.

600

சைவத்தில் உளந்தோய்ந்தீர்;

'சைவமொடு புராணஞ்சேர் கதைகள் தம்மில் பொய்வைத்தார்' எனக்கழறிப்

பொசுக்கியதும் பேராண்மைப் பொலிவென் என்பேன், தெய்வத்தார் நாங்கள்'எனத்

தீந்தமிழர் மரபெல்லாம் திரித்தார் தீமை கைவைத்தே களைந்தெறிந்த

கவின்மலையே, நும் ஆண்மைக் கருத்தென் என்பேன். 60|

(அறுசீர் ஆசிரிய விருத்தங்கள் - வேறு)

320