பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நாவொரு நிகண்டு; நாடியோ தமிழாம்;

ஊறும் எச்சிலே உணர்தமிழ் அமுதம்;

ஊறிடும் சுவைக்கோ உலகமே உவமை!

கருத்தோ குறுந்தொகை, கணிக்குலை தொண்டை; (35) எழுத்தோ வயிரம்; எழுங்குரல் வெண்கலம்; சொல்லோ சுளையாம், வெல்வதே தொழிலாம்.

தோளிரு கோடியும் தோழர்பல் கோடி வாளுடை மறவர் வாழ்விடம்; மார்போ

'எதையும் தாங்கும் இதய அரங்கம்; (40) நெஞ்சம் தமிழ்க்குப் பஞ்சணை ஆகும்.

கையோ காப்பியக் காவிரி; சட்டைப்

பையோ காசிலாப் பஞ்சறை, சட்டையில் பொத்தான் இல்லை; பேசிடில் வாயைப்

பொத்தான் இலனே, பொருந்தான் இலனே! (45)

தொந்தியோ சிறிது; தொந்தமோ பெரிது.

கால்கள் தன்மானக் கால்கோள் ஆகும்.

329