பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

அண்ணாவே அண்ணாவே! அண்ணா!' என்ற அருஞ்சொல்லை யாம்உரைத்த போதில் எல்லாம் பண்ணாக இனித்திட்ட பரிவுச் சொல்லே பதைப் பாகச் செய் தீரே அண்ணா: ೬೧TTಹಿ புண்ணாகப் பேசாத புகழ்ப்பண் பாளா! புண்ணாக்கிப் புண் நாக்காய்ப் புரிய லாமோ? அண்ணாவே அண்ணா.எம் அன்பின் ஊற்றே!

ஆற்றேன்யான்; ஆற்றோம்.யாம்; அழிந்தும் ஆற்றோம். 6; 7

நிலநடுக்கம் என்றாலும் நிற்போம் அண்ணா!

உளநடுக்கம் எம்மாலே தாங்கற் கில்லை. புலன் அடக்கம் பெற்றோரும் புலம்பச் செய்தீர் புலனெல்லாம் புகுந்தெம்மை ஆண்ட அண்ணா! குலைநடுக்கம் தம்பியர்க்குக் கொடுக்க லாமோ? கும்பியெலாம் கொப்பறையாய்க் கொதிக்கும் போது, நிலன் ஒடுக்கிப் புலம்புதற்கும் சொற்கள் கானேம்;

நீர்வளர்த்த குளிர்தமிழும் கொதிக்கக் கண்டேம். 6.j 8

33]