பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

79. எதிர் முழக்கிட்ட

எரிமலை, .

காவிரி, சாக்கடைக் கலங்கலில் சுழன்றது;

பொதியில் வாடைக் குதியில் கிடந்தது!

ஒருநெடு மூச்சு, பெரும்புயற் காற்றாய்க் கறுவி எழுந்தது; கனன்று நிமிர்ந்தது! 'பொன்னைக் கொழித்திடும் பொன்னி யாற்றில் (5) கொன்னைச் சாக்கடைக் கொடிபறந் திடுவதோ? தென்றலை ஈன்ற தென்பொதி மலையில் கொன்றிடும் வாடை கொலுவீற் றிருப்பதோ:

ஓ! ஒ! - பைந்தமிழ் பிறமொழிப் பதுக்கலில் அழுவதோ? வந்தவர் நெருப்பில் வதைவரோ தமிழர்? (10)

என்றோர் எரிமலை எதிர்முழக் கிட்டது.

முழக்கலில் பகைவர் முடங்கினர்; ஆயினும்,

335