பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

"தாக்கிது. வேடம், பட்டா போன்ற ஒன்றிரண்டு சொற்கள் மட்டும்.வருகின்றன. அவற்றையும் களைந்து விடலாம் .

புதுமையும் புரட்சியும்

இவருடைய கவிதைகளில் புதுமைகள் பல உள. புரட்சியும் உள்ளது. துணிந்து கருத்துகளை முன் வைக் கிறார். உரையாசிரியர்கள் செய்த தவறுகளைச் சுட்டும் போது களஞ்சியத்தில் கறையான்கள்' என்கிறார்.

சொல்லாட்டமும் பொருளுட்டமும் எனும் தலைப் பில் அமைந்த கவிதை இவரது புலமைக்குச் சான்று எனலாம், -

சில கவிதை வரிகளில் முரண்சுவை அமைந்து சிறப் பதைக் காண்கிறோம்: -

"கன்னியில்லாச் சோலையிலே தென்ற லுமோர் குளிரோ? கன்னியவள் அனைத்திருந்தால் தென்றலுமோர் குளிரோ?” - (42)

கவிஞர்கள் எவ்வளவுதான் குமுகாயச் சூழல்களை மறந்து கற்பனை உலகில் உலவினாலும் காலத்தாக்கம் என்பது அவர்களையும் தீண்டத்தான் செய்கின்றது. காதல் உரையாடலில் கூட நம்பி நங்கையைப் பார்த்து,

"பெண்ணொன்றும் ஆணொன்றும் பெற்றுக் .

- - கொண்டோம்; பின்னொன்று வேண்டாம்நாம் பேணிக் கொள்வோம்' (397)

[35].