பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கண்மூடி னார்பெரியார்; கண்விழித்தே கண்மூடிப்

பழக்கங்கள் மூடக் காண்போம். பண்மூடித் தலைசாய்த்தார்; படிகவிழ்ந்த சாதிமுறை

பட்டதலை சாயக் காண்போம். விண்மூடும் உறக்கமிட்டார் உறக்கமின்றித் தாழ்வுயர்வு

வீழும்நெட் டுறக்கம் காண்போம். வெண்தாடி வேந்தர்வாய் மூடினும்,நாம் வினோர்வாய்

விரியாமல் மூடக் காண்போம்.

631 கதறவைத்துத் தமிழினத்தைக் கலங்கவைத்துக் கண்மூடிக்

கடுந்துக்கத் தலையை வைத்துப் பதறவைத்து நம்பெரியார் பரப்பிவைத்த பகுத்தறிவுக்

கருத்துவைத்தே, கையும் காலும் உதறவைத்துத் தமிழ்ப்பகையை ஓடவைத்தே

ஒடுங்கவைத்தே ஒயவைத்துத் தலைதுாக்காமல்

சிதறவைத்துத் தமிழர்க்குச் செழிப்புவைத்துப்

. பெரியார்க்குச்

சிறப்புவைத்து நன்றி வைப்போம்.

(எழுசீர் ஆசிரிய விருத்தங்கள் :

344