பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

80. புரட்சித் தென்றல்.

திறந்து கிட்ந்தது தமிழ்மனை அங்கே இறந்து கிடந்தன எழுச்சியும் உணர்ச்சியும்.

இனத்துச் சிறுத்தை இளித்ததுப் பல்லை; குணத்துக் களிறு குறுகிற்று கூனி;

அரிமா சுருண்டு நரிமா ஆனது; (5) அயில்வேல் மத்தாய்த் தயிரில் கிடந்தது; மரபும் பண்பும் மண்டியில் துரங்கின.

மடமை என்னும் தலைகீழ்ப் பாட

உடைமை வெளவால் உறங்கித் தொங்கியது.

சாதி அரக்கி சமயக் கிறுக்கனொடு (10) காதற் பானையில் கட்டிக் கிடந்தனள்.

பிறமொழிக் கறையான் பின்னிய கோயிலில் நிறவெறிப் பாம்பு நிமிர்ந்து நின்றது.

345