பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

ர் பதவியிலிருக்கும்போது ஓகோ என்று புகழ்ந்து

ஒருவ

தும் பதவியில்

பாடும் கவிஞர்கள் அவர் பதவி இழந்த இருப்போரை நோக்கித் தாவி விடுவது நம் நாட்டின் நிலைமை. இந்தப் போக்குடைய போலிக் கவிஞர்கள் ஒரு புறம்.

நாங்கள் எச்சில் துப்பினால் எதிரிகள் அதில் மூழ்கி விடுவர், நாங்கள் மூச்சுவிட்டால் பகைவர்கள் முற்றாகக் கவிழ்ந்து போவர்-என்றெல்லாம் வெற்றுணர்ச்சியைக் கிளப்பி விட்டு விட்டு விழுந்து படுக்கும் கவிஞர்கள் ஒரு

புறம். -

இவர்களுக்கிடையில் சொல்லும் செயலும் ஒன்றாய் கவிதையும வாழ்வும் ஒன்றாய், மாறாத உள்ளத்துடன் இயங்கும் ஒரு கவிஞரின் படைப்புகளைப் படிப்பதே ஒரு மறுமலர்ச்சி தான். 'கவிஞர்கோ கோவை. இளஞ் சேரனின் உள்ளத்தில் உண்மையொளி இருக்கிறது. அது சொல்லில் தெரிகிறது.

வளமான இந்தக் கவிதைகள் வாழட்டும்; வருங்காலத் தமிழனுக்காவது வாளாகட்டும்.

மதுரை 洛、将 چ 3 2-1 2-87 - மு. தமிழ்க்குடிமகன்

(40)