பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரல்

முத்தோடு பவளத்தைக் கலந்து, -

முழுநிலவின் பனிநீரைப் பெய்து, நத்துமலர் மென்மையதைத் தூவி,

நறும்பொன்னின் உருக்கதனில் பிசைந்த வித்தகமாம் சாந்ததனில் வடித்த -

வியன்சிலையில் தென்றலதை ஊதி

முத்திரையாய் உலவவிட்ட உயிர், என்

முச்சோட்டத் தனில்,அவளாய் இழையும்,

ஆவின்பால் ஆடைமேல் நீல

அழகுவேர் இழையோட, நடுவில் பூவின்தேன் கருநாவம் கணியில்

பூசிவிட்ட கவர்ச்சிக்கல் நெகிழப் பாவின்பால் வடித்தெடுத்த தமிழைப்

பாடுகின்ற இரண்டிமைகள் நடிக்கும் ஒவியத்தின் உயிர்க்கண்கள் கொண்டென்

உயிரோட்டந் தனில்,அவளாய் ஊர்வாள்.