பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

6. விதையில்லாக் கனி

guា .

அன்பூறும் அத்தானே தமிழத் தேனே! - - - அரிதரிதாம் கனியொன்றை அடைந்தேன், நானே. குமரன்: -

இன்யூறும் திருக்குறளின் இன்பப் பாலே இடையில்லாக் கன்னியெனில் கனிநீ அன்றோ குமரி: - -

பண்பூறும் திருமணத்தில் பதிந்து விட்டால் பகர்வதற்குக் கன்னியெனும் நிலையொன் றுண்டோ ? குமரன்: -

தென்பாங்குத் தேன்மொழியே திகழ்உ றுப்பாம் தேங்குகணிச் சோலையெனத் திகழ்வாய் சொல்வேன் 23 உருவார்ந்த பனம்பழம் உன் கூந்தற் கட்டாம்; உள்வளைந்த பூவன்அன்றோ உன்றன் நெற்றி! கருநாவல் கணிகண்ணின் மணியே யாகும்; கன்னங்கள் மாங்கனிக்குக் கவினே ஊட்டும்; மருவார்முந் திரிக்கனியோ மூக்கிற் கேங்கும்; மலருதடோ கொவ்வையதாய் மலர்ந்து காட்டும்; திருவார்ந்த கனியரிதாய்த் திகழ்நெஞ் சத்தே திருடிவைத்துக் கொண்டதென்ன, தீரச் சொல்வாய் ? 24

[7