பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

12. அந்த ஒலி!

೨ಫಿಕ9ಣಿ, பஞ்சாலைச் சங்கொலித்த

அமுதஒலி, உழைத்தவர்க்கோ அன்பொலியாம். சிந்துபாடிப் புறப்பட்டான் சிவக்கொழுந்து,

சிறகடித்து வலைப்பறவை பறந்ததென. வந்துசேர்ந்த தோழர்கள் குரலெடுத்து

'வரவேண்டும் பொதுவுடைமை' எனவொலித்தார், அந்தஒலி, இவன்குலத்து வாழ்வொலியாம்;

'அஃதென்றோ என்றேங்கி வீடடைந்தான். 49

ஆடோட்டி வந்ததங்கை அண்ணவென்றாள்;

'அண்ணியெங்கே என்றவிழ்த்தான் ஆத்திரத்தை; ஓடோடி வருகின்றேன் என்றுரைத்தே

ஒடியுளாள் குடமெடுத்தே எணமுடித்தாள் ; பேடோடு பேசுதற்குத் துடித்தமனம்

பேதுற்றுப் படபடென்றே அலறுகையில் காடோடி மானெனவே குதித்துவந்தாள்:

கைவளையல் வரவுசொல்லி ஒலித்ததங்கே!

50

32