பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

13. அச்ச நோய்க்கு அச்சமே மருந்து.

தோழி:

"அத்தான்'என் றரவணைத்த கைகள் கூப்பி அருமருந்தே என்றெதற்குப் போற்றி செய்தாய் ?

தலைவி:

கொத்தாக அச்சத்தைக் குணமாய்க் கொண்ட ೧ಹTTಣಹu೧7ಹ கும்பிடுதல் குறியாய்க்

கொண்டேன்.

தோழி:

நத்துமனை யாள் உன்பால் அச்சம் போலும் நங்கை, நீ அது கருதிப் போற்று கின்றாய்!

தலைவி:

ஒத்தஅச்சம் அஃதன்று; பழிபால் அச்சம், கொலையச்சம், அஞ்சவதற் கஞ்சும் அச்சம், இளிவச்சம், தீவினையச் சம்:தி தாமோ ?

52

34