பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 5 சித்தார்த்தர் எனவும் சிறந்த சர்வார்த்த சித்தர் எனவும் சீர்ப்பெயர் கொண்டவர் , 6. போதம் பெற்றபின் புத்தர் எனும்பெயர் ஈத லுற்றார் இவ்வுல கோரால். 7 கவுதமக் குடியில் கவினுறப் பிறந்ததால் கவுதமர் என்று - கமுறும் பெயரும் 8 ஒழுங்காய் ஒன்றக் கவுதமப் புத்த ரென வழங்கப் பெற்றார். வாழ்வைத் துறந்தவர் . 9 புத்தர் போதம் பெற்ற புகலிடம் ‘புத்த கயை’ எனும் புகழ்ப்பெயர் பூண்டது. 10 போதம் பெறுதற்கு ஏற்ற புகலிடம் ஆதல் பற்றிஅவ் வரச மரமும் 5 சித்தார்த்தர், சர்வார்த்த சித்தர் - எண்ணிய எல்லாம் எய்தப் பெறுபவர். 7 கவின் அழகு பொலிவு: ஆ" * :ே 8 வாழ்வைத் "ந்ேத்ே வ: 201 11 போதி மரமெனப் புகழப் பெற்றது. ஒதுதல் எளிதோ இதனது உயர்வை' 12 இந்த மரமதை இம்மா நிலத்தில் எந்த மாந்தரும் ஏத்துதல் மரபு. 13 போதம் பெற்றபின் புத்தர் பெருமான் மாதவம் புரிந்த அம் மரத்தின் அடியிலும் 14 போதம் தந்த அப் பொழிலின் பாங்கரும் மோதும் பற்றுகள் - முற்றும் அற்றிட 15 ஏழு வாரம் . இனிதே நோற்றார் . வாமம் உயிர்களின் வருத்தம் பலவும் 16 அறிவுக் கண்ணால் ஆழ்ந்து கண்டார். உறவு கொண்டார் உயிர்க ளிடத்தெலாம். ப போதி - போதம் உற்றது. 14 மோதும் பற்றுகள் - மனத்தோடு அலை மோதும் பற்றுகள். 15 ஏழுவாரம் - நாற்பத் தொன்பது நாள். . مر -