பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 25 26 208 மன்னரின் வரவேற்பு மைந்தரைத்தாம் வரவேற்க மன்னர் தேரில் மாண்புடனே அமர்ந்துநனி மகிழ்ந்து நோக்க, எந்தையையாம் காண்பமென மக்கள் ஈண்ட, எவ்விடத்தும் எள்விழவும் இடமே இல்லை. (வேறு) ஆற்றச் சிரைத்த தலையுடனே - கூட அளவில் துறவியர் சூழ்ந்துவர ஊற்றமார் உள்ள உறுதியொடு - புத்தர் உயர்ந்த நகரை உறலானார். காவிக் கடலில் கதிரவன்போல் - ஐயர் காவி உடைஅணிந் தோர் நடுவே மேவி வருவதைக் கண்டதுமே - மன்னர் மிக்க உணர்ச்சி அடையலுற்றார். மைந்தர் உறவை மறந்துவிட்டுப் பெரு மலைநிகர் தேரின் இறங்கிவந்து தந்தை சுத் தோதனர், தண்ணருளார் - தம் தனயனேக் கண்ணுறத் தாவினரே. தண்அருள் மகன். 24 எந்தையை - எம்தந்தை போன்ற புத்தரை, ஈண்ட - திரள. 25 ஆற்ற - மிகவும் மழுங்க, ஊற்றம் - ஆற்றல், வலிமை, 26 காவிக்கடல் - காவி நிறக்கடல். காவி நிறக் கடலில் ஞாயிறு தோன்றுவதில்லை; ஆதலின், ‘இல் பொருள் உவமை அணி ஆகும். (செங்கடலை இங்கே 27 மலைநிகர் - மல்ே போன்ற ; விட்டுவிடுக). 姊 தேரின் - தேரிலிருந்து ; ஆர் - குளிர்ந்த அருள் மிக்க; தனயன் - 209 சென்றமுற் கால நினைவுவர - வேந்த்ர் சித்தார்த்தா என்றே அழைத்திடவும். நன்றே கருதித்தம் நாவெடுக்கப் பின்அது நல்லதன் றென்றே அட்க்கிவிட்ட்ார்.” மன்னரும் மக்களும் போற்றிடவே - புத்தர் மழைபோல் அறவுரை பெய்திட்டார். பின்னர்ப் பொழிலுறு மண்டபம்போப்ப். பல பிக்குகள் சூழ்ந்திடத் தங்கினாரே. மற்றைநாள் காலை திருவோடு - கையில் மன்ன மறுகின் நடுப்போந்து பெற்றிட உண்டி பெரிதிரந்தார் - மக்கள் பேசொனாத் துன்பொடு கண்டனரே. 31 ஊண்டர மங்கையர் போட்டியிட்டு - நல்ல உணவு கொணர்ந்து நிரப்பினரே. வேண்டா அழுகை யிடையேதான் - இந்த வெறுப்பு நிகழ்ச்சி நடந்ததுவே. 32 கண்ணிர்க் கடலின் நடுநின்று - இந்தக் காணொணாக் காட்சியைக் கண்டசிலர் மன்னர் அறிந்திடச் செய்ததனால் - அவர் மைந்தனைக் கண்டிட ஓடிவந்தார் ੋ– SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS - ● ~. 麓 28 முற்கால நினைவு - சித்தார்த்தன் அரண்மனையில் இருந்த காலத்து நினைவு. 29 பொழில் - சோலை; பிக்குகள் புத்த சமயத் துறவியர்.30 மற்றை நாள் - மறு நாள்; |பெரிது இரந்தார் - பெருந் தன்ழையோடு பிச்சை கேட் டார்; பேசஒனா - பேசஒண்ணா - சொல்லமுடியாத, 31 இளண்டர - ஊண்தர வேண்டா அழுகை - விருப்ப மிேல்லாததனால் உண்டான அழுகை. 32 அவர்- மன்னர் . – 14