பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ல் இட்டுச்)சட்ட்ாலும்; 268 எங்கனும் இந்தப் பேச்சே எரியெனப் பரவிற் றந்தோ! தங்கவே பழிசு மத்தல் தகாதென மறுத்தார் சில்லோர் : இங்கிதில் ஐயம் ஏதோ இருக்கிற தென்றார் சில்லோர் : பொங்கிடும் சினத்தி ைேடு புத்தரை வெறுத்தார் சில்லோர் . (வேறு) இடினும் நெருப்பில் தங்கம் இன்னெளி குறைதல் இல்லே : சுடினும் சங்கு வெள்ளைத் து நிறம் மாறல் இல்லை : அடினும் காய்ந்து நற்பால் அருஞ்சுவை குன்றல் இல்லை; .ெ கடினும் மேலாம் மக்கள் கெட்டது செய்தல் உண்டோ? (வேறு) சுந்தரி என்னும் கொடியபாம்பு-செய்த சூழ்ச்சி எனும் நஞ்சு சூழ்ந்ததனால் தந்தையாம் புத்தர் தனிப்பெருமை-சற்றும் தாழ்ந்திட வில்லை தரை மீது. சுந்தரி ஒர்நாள் கொலையுண்டு-குப்பை சூழ்ந்திடு மேட்டில் கிடந்தனளே. அந்த வழியிலே சென்றவர்கள்-அதை - 5 எங்கனும் - எவ்விடத்தும்; அந்தோ - ஐயோ! தங்கவே (பழி)தங்கும்படி; 6 இடினும் - (நெருப்பில்) ட்டாலும்; இன்ஒளி இனிய பிரகாசம்; சுடினும் - (நெருப் ● து நிறம் - தூய வெள்ளைநிறம் : அடினும் - காய்ச்சினலும்; குன்றல் - குறைதல்; கெடினும் - (வாழ்வு)கெட்டாலும்;மேலாம் மக்கள் - மேலோர் கெட் டது - கெட்ட செயல். 7 தரை மீது - உலகில். 269 அரசும் அறியவே செய்தனரே. 9 புத்தரைத் துாற்றிடச் சுந்தரியை-அவர் பால் போக்கி அனுப்பிய புல்லரெல்லாம், புத்த ரைக் காக்கவே அவராட்கள்-இக்கொலே புரிந்தனர் என்றொரு பொய்யுரைத்தார். 10 பின்னர் அவளைக் கொலைபுரிந்தோர்-அரசின் பெருந்திறல் ஒற்றர் பால் இக் கினரே. அன்னவர் புத்தரின் மாற்றாரே-மேலும் அண்டிட வேபழி கொன்றனரே. | i குற்றம் புரிந்த கொலையாளர்-பின்பு கொல்லும் ஒறுப்பினைப் பெற்றிட்டார். தற்றவப் புத்தரின் நற்புகழ்பின்-இந்த தானிலம் எங்கும் பரவியதே. (வேறு ஆசிரியப்பா) ஐயர் புத்தரின் அரிய இரண்டு கைகளுள் ஒன்றுபோல் கருதத் திகழ்ந்த மெய்கொள் அடியவர் மெளத்கலி யா யனர் இறுதி அடைந்ததும் இவ்வகை யால்தான் . இராசக் கிருக இன்னகர்க்கு அருகே 5 இசிகிலி மலையில் இருக்கும் குகைகளுள் ஒன்றில் தங்கி உயரிய நெறிகளை நன்றே பரப்பிய நாளில், பகைவர் கொன்றே தீர்த்தனர் குணமுறும் இவரை. 9 அவர்ப்ால் - புத்தரிடம்; புல்லர் - அற்பர் அவர் ஆட்கள் - புத்தரின் பணியாட்கள். 10 திறல் - திறமை; மாற்றார் - பகைவர்; மேலும் பழி அண்டிடவே மேலும் புத்தருக்குப் பழி வந்து சேரும்படி கொல்லும் ஒறுப்பு - மரண தண்டனை ; நானிலம் - உலகம். அடி 4. இறுதி -சாவு, 5 இன் நகர் - இனிய நகர். 6 இசிகிலி ஒரு மலையின் பெயர். 8 பரப்பிய நாளில் - பரப்பிய காலத்தில். 9 இவரை - இந்த மெளத்கலியாயனரை.