பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 இறுதி வழிபாடு ஆசிரியப்பt பகவரின் ஊனுடல் பலரும் வணங்கத் தகவுறு மேடையில் தனிச்சிறப் புடனே 2 வைக்கப் பெற்றது ; வகை வகை நறுமணம் மிக்க பொருளொடு மிடைமலர் மாலையால் 3 இடும்பை நீங்க இன்னுயிர் நீத்த உடம்பைச் சுற்றி ஒப்பனை செய்தனர். 4 குசீநாட் டுள்ளோர் கொளும் வழக் கப்படி இசையை இயங்கள் இனிதே வழங்க, 5 ஆடலும் பாடலும் அணிபெற நிகழ்ந்தன. வாடவில் மேனியை ஆறுநாள் வைத்து 6 வணக்கப் பூசன வகையாய் நடாத்தி மணக்க ஏழாம் நாளில் மாண்புறு AAASSSS S SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS சிறுபாடல் பகவர்-புத்தர். 2 மிடைதல்-நெருங்கத், தொடுத்தல், 3 இடும்பை - துன்பம். 4 கொளும் - கொள் ளும் (இடைக்குறை). ஆரம் - நீறு - எரித்த நல்திறம் நல்ல 295 ஆரக் கட்டைகள் அடுக்கிய சிதைமேல் சேர உடலைச் செவ்வனே வைத்து, மாமறை முழங்க மலர்களைச் சாத்தி, சம நிகழ்ச்சிகள் எல்லாம் செய்து, மும் முறை சுற்றி முனிவரர் வந்து பின், செம்மறை விதிப்படி சிதைஎரி மூட்டினர். அடுத்தநாள் காலை அனல் எரி நீற்றை எடுத்துக் குடத்தில் இட்டுப் பலரும் அடுத்து வணங்க அருமணப் பொருளும் தொடுத்த மாலையும் துன்னிடச் செய்தனர். குடத்தின் முன்னர் க் குழுவாய்க் கூடி நடத்திலும் பண் ணிலும் நற்றிறம் பெற்றோர் ஆடல் பாடல் அனைத்தும் நடத்தி ஈடில் பூசனை இயையச் செய்தனர். சந்தனம்; சிதை ոա விறகடுக்கு. 10 எரி சாம்பல், 12 நடம் நடனம்; பண்- இசை; திறமை - 13 இயைய - பொருந்த, ஏற்ப,