பக்கம்:கௌதமப் புத்தர் காப்பியம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 என்னவே இளைஞன் கேட்க, ஈபவர், போர்வந்திட்டால் பன்னரும் போர்க்க ளத்தில் பகைவரை வெட்டிக் கொன்று துன்னிட வெற்றி, இன்ன, தூயனே வேண்டும் என்றார். 4 ஒருயிர் காக்கச் சால உஞற்றுவர் மருத்து வர்தாம் ஆருயிர் பலவும் போரில் அழிந்திடக் கொல்லல் தீமை பாருயிர் அனைத்தும் காக்கும் பண்புமன் னர்க்கு வேண்டும் ஒருவீர் இதனை என்றே ஒதுங்கிளுன் பயிற்சி விட்டே. 5 வேட்டையா டற்கு வெய்ய - விலங்குகள் திரிந்து வாழும் காட்டைநாம் அடைதல் வேண்டும் கடிய நீ புறப்ப டென்று வேட்டையில் பயிற்சி மிக்கார் விளம்பிட, இளைய வேந்தன் கூட்டமாய் உயிர்கள் கொல்லல் கொடுவினை, கூடா தென்றான். 6 குதிரை ஊர் போட்டி நீமேற் கொள்க என் றாரை நோக்கி 3 ஈபவர் - பயிற்சி கொடுப்பவர்; பன்னரும் - பன்ன அரும் - சொல்லுதற்கு அரிய - பன்னுதல் சொல்லுதல் ; துன்னுதல் - அடைதல். உஞற்றுதல் - முயன்று 29 அதிரவே பரியை ஒட்டின் அயர்ந்திடும்; அந்தோ வேண்டா! எதிர்வுறப் புரவி ஒட்டி எவரையும் மிஞ்சி வெல்லின், உதிர்வுறு சருகாய்த் தோற்ருேர் உலருவர் வேண்டேன் என்றான் (வேறு) கருவில் திரு: 1 சித்தன் கல்வியில் சிறந்திட விசுவா மித்திரர் என்னும் மேன்மை ஆ சானும், படைப்போர்ப் பயிற்சி பலவும் திறமாய் அடையச் சாந்தி தேவ ஆ. சானும், 5 அரசனால் மகனுக்கு அமர்த்தப் பெற்றும், 'குருவை மிஞ்சிய மாணவன்’ எனவே மருவிய பழமொழிக் கேற்ப, மைந்தன் கருவில் திருவுறு கலைஞனா கினனே. (வேறு) இன்னிசை வெண்பா பல்லாண் டுழந்தும் பழுக்கா மரமுண்டு; சில்லாண்டில் சீர்பயன் சேர்த்திடும் சின்மரங்கள் ;

இ6 ஊர்தல் - சவாரி செய்தல்; அந்தோ - ஐயோ; எதிர்வுற - எதிர்ப்பாக, புரவி - குதிரை; மிஞ்சுதல் - முன்னேறிக் கடத்தல்; உலருவர் - வாடுவர். 1 சித்தன் - சித்தார்த்தன்; விசுவா மித்திரர் - கல்வி பயிற்றிய ஆசிரியர் பெயர். 4 சாந்தி தேவன் - படைக்கலப் பயிற்சி தந்த ஆசிரியர் பெயர். 7 மருவுதல் - பொருந்தி வழங்கு :தல்; மைந்தன் - மகனாகிய சித்தன். 8 கரு - கர்ப்பம்: கருவில் திரு உறல் - கருவில் இருக்கும் போதே திறமை பெற்று வளர்தல். வெண்பா - ! உழந்தும் - பாடுபட்டு

உழைத்துச் செய்தல்: ஆருயிர் அருமை உயிர் - அரிய உயிர்; பார் - உலகம்; ஒர்தல் - ஆராய்ந்து உணருதல். வேள்ர்த்தும். 5 வெய்ய - கொடிய ; கடிய - விரைவாக இவளாத்தும்