பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சணப்பித்தல் நவநாகரிக யுவனும், அவளை மோப்பம் பிடித்துத் திரியவே விரும்புவான். பொதுவாக ஆண்மையுள்ள எவனும் அவளைக் கண்ட மாத்திரத்தில் கறுப்பையும் சிவப்பையும் பார்க்கமாட் டான். அவள் கறுப்பி தான்; ஆனால் கறுப்பில் அழகி. திருவாங்கூர் யானைத் தந்தப் பொம்மைகளில் எத்தளை மோகனம் இருக்கிறதோ, அதுபோலவே எருமைக் கொம்புப் பொம்மைகளிலும் ஒரு அழகு இருக்கத்தானே செய்கிறது? மூக்காயி தந்தச் சிலையல்ல; கொம்புச் சிலை! 'ராகவன் ஆண்மையற்றவன் அல்ல. நல்ல ஆண்மை புள் ளவள் தான்! எனவே மூக்காயியைப் பார்க்க:/"மல், பார்த்து ஒரு கணமேனும் கண்ணையும் நெஞ்சையம் 2. நீதி கொடுக்காமல் இருக்க முடியவில்லை. தினம் 57லையில் ஏழெட்டு மணிக்கு முன்னால் எழுந்திருக்கத் தெரியாத ராகவன், மூக்காயி வேலைக்கு வந்ததிலிருந்து 'கால் ஆறு மணிக்கே எழுந்துவிடுவான். காலையில் ஒக்காயி விளக்கு 1.07ற்றை எடுத்துக்கொண்டு கூட்டத்தைப் பெருக்கும் சத்தம் அவனுக்கு எப்படியோ கேட்டுவிடும். உடனே எழுந்து உட்கார்ந்து கட்டிலில் படுத்தவாறே மூக்காயியின் அழகை ரசித்துக் கொண்டிருப்பான், மூக்காயி சிலை தான்; ஆனால் வெறும் சிலையாக மட்டு பிருந்தால் ராகவன் அத்தனை தூரம் மயங்கி இருக்கமாட் டான், அவள் நடமாடும் சிலே; புன்னகை கு!மிழச் சிரிக்கும் சிலை. எனவே அவன் அந்தச் சிலையின் நடமாட்டத்தையம் புன்னகையையும் காண்பதில் சொல்லுக்கு வசப்ப...ாத ஏதோ ஒரு புதுமையைக் கண்டான். மூக்காயி வீடு பெருக்கும் போது, ரவிக்கை அ கனியாத அந்த வாரம் போன்ற உடம்பு குனிந்து வளைய, எந்தக் கோணத்திலும் சாய்ந்து சரியாத அXளது அழகு வனப்புக்கள் கிறுகிறுத்து நிற்கும் மோசலத் தைக் கண்டு மனம் சொக்குவரன், கேணியில் குடத்தைக் கட்டி இறைக்கும்போது, அவளது கரிய கைகள், மேலும் கீழும் ஏறியிறங்கும் லாகவத்தை , அந்த லாகவத்தால், மனம் பூரித்து நிமிரும் நெஞ்சத்தை அளந்து பார்ப்பான். மாவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/11&oldid=1270186" இலிருந்து மீள்விக்கப்பட்டது