பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 vணப்பித்தம் அரைக்கும்போது, அரிசி குத்தும்போது, சரிந்து குழையும் கூந்தலை ஒரு கையால் தூக்கிச் சொருகி, அவள் பெருமூச்சு விடும்போது, ராகவனுக்கும் தன்னை அறியாமல் பெருமூச்சு அதிகம் விளக்குவானேன்? மூக்காயியின் கிராமிய அழகு ராகவலைக் கிளறிவிட்டது; தூங்கிக்கிடக்கும் ரஜோகுணத்தை உசுப்பிவிட்டது. அவன் நிமிஷத்துக்கு நிமிஷம் ரஜோ குணத் துக்கு வசப்பட்டுக் குறுகுறுப்பு அடைந்தான். ஆனால் ராஜம்மா வுக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியவா, செய்யும்? களைத் திப்போய் வீட்டுக்கு வரும்போது, அவனுக்குப் பசியாற்றத் தெரி&A.Nr7 தவள், அவன் மனசின் அந்தரங்கத்தில் எழும்பியுள்ள - புதிய t>சினயத் தெரிந்து கொள்வானா? 'ராகவன் தன் அழகு ரசகையில் மூழ்கியிருக்கும் சமயத்தில் திடீரென வந்து “ 'என் னங்க, இப்படி உக்காந்திருந்தா வீட்டுக் காரியம் எப்படி, நடக் கிறது? கடை க்குப் போய் காய்கறி வாங்கி வாருங்கள்! என்று சொல்லி விடுவாள். வெந்து கனன்று பொறி பறக்கும் அவனது ரஜோகுker த்தின் மீது, ஒரு குவளைத் தண்ணீரை விட்ட 'Br திரி இருக்கும். எரிகிற நெருப்பில் தண்ணீ ர் விழுந்தால், அது உஸ்ஸென்று சீருமல் என்ன செய்யும்? ராகவனுக்கு உடனே கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும், ராஜம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டிவிடுவான்! எனவே ராஜம்மாவுக்கும் ராகவனுக்கும் வரவிரப் பூசல்கள் பெருக்கலாயின. தன் கணவனை ராஜத்தால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. தன் கணவன் வேண்டுமென்று தான் கோபிக்கிறானா, இல்ல, அவனது குணமே அப்ப டித்தானா என்ற சந்தேகம் அவளுக்கு இத்தனை காலத்துக்கு அப்புறம் தான் மனசில் பட்டது. ஆனால், அவளுக்கு அதை ஆராய்ந்து முடிவு காணப் பொறுமை இல்லை; எனவே ஒரு நாள் மதியம் அவள் வழக்கம்போல் , கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குப் பணம் புறப்பட்டு விட்டாள்! ,, ராஜம்மா இவருக்குப் போனது நல்லதென்றே ராகவ் னுக்குப் பட்டது. ராஜம்மா போய் விட்டதால், மூக்கா 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/12&oldid=1270187" இலிருந்து மீள்விக்கப்பட்டது