பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணப்பித்தம் வராமல் நின்று விடுவாளோ என்ற பயம் வேறு மனசில் அடித்துக் கொண்டது. ஆனால், அன்று மாலையே மூக்காயி வேலைக்கு வந்துவிட்டாள். வீட்டில் அம்மா இல்லாததைக் கண்டு திகைத்தாள், ...

  • 'என்ன சாமி, அம்மா எங்கே? பாருக்குப் போயிட்

டாங்களா?” ராகவனுக்கு உடம்பு குதுகுதுத்தது, இத்தனை நாள் வரை மூக்காயி அவனிடம் நேரடியாகப் பேசியதில்லை..

  • “ ஆமா. நீ அதுக்காக வேலைக்கு வராமல் நின்னுடாதே!”

மூக்காயி யோசித்தாள்.

    • காலையிலே வந்து வீட்டைப் பெருக்கிட்டு, குளிக்க

வைக்கக் கொஞ்சம் தண்ணியும் பிடிச்சு கூட்டுப் போ. அவ்வளவு தான் உன் வேலை!” மூக்காயி பதிலே பேசவில்லை. ஒருவேளை போய் விடுவாளோ என்று ராகவனுக்கு அங்கலாய்ப்பு. ஆனால், அவள் வீட்டைப் பெருக்குவதற்காக, விளக்குமாற்றைத் தொட்டதுமே அவனுக்கு அந்த அங்கலாய்ப்பு மறைந்து விட்டது. 'மூக்காயி தினம் காலையில் வந்து வேலை பார்த்து விட்டுப் போய்விடுவாள். இப்போதெல்லாம் சாகவனுக்கு ராஜா குணம் ஒன்றே தலைதூக்கி நின்றது! ஹோட்டல் சாப்பாடும் ஹோட்டல்காரன் நல்ல கறி புளி வைக்காவிட்டாலும், நேரத்துக்குச் சாப்பாடு போடுகிறான்; மேலும் அவனிடம் கோபித்துக் கொள்வதற்கு முடியாது. எனவே தமோகுணம் படுத்தே 'உறங்கிவிட்டது. ரஜோகுணம் தினம் தினம் காலையில் மூக்காயி வந்தவுடன் காலையரும்பி, பகலெல்லாம் ' போதாசி மாலை மலர்ந்துகொண்டே இருந்தது. இருந் தாலும், ராகவன் மூக்காயியின் செளந்தர்ய தரிசனத் துடனேயே திருப்தியடைய எண்ணினான். காரணம், - அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/13&oldid=1270188" இலிருந்து மீள்விக்கப்பட்டது