பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணப்பித்தம் சொல்லிவிட்டால் என்ற பய உணர்ச்சிகளும் அவன் மனசில் கிளம்பின. இருந்தாலும், தானாக முந்திப் போய் ராஜம்மாளை அழைத்து வந்துவிட்டால் எல்லாம் சரியாகப் போய்விடும் என்பது அவன் நம்பிக்கை. ஆனாலும், அவன் ரா நீதை அழைத்து வருவதற்கே முனையவில்லை. 'சரி,. தாளைக்கு எப்படியும் ராஜத்துக்குக் கடிதம் போட்டுவிட் வேண்டியது தான்' என்று தீர்மானித்துக்கொண்டு ஒரு நாள் இரவு படுத்தான், காலையில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது; எழுந்து போய்க் கதவைத் திறந்தான். அங்கு ராஜம்மாவும் சந்திரனும் நின்றுகொண்டிருந்தனர்.. . . ராகவன் ஒன்றுமே பேசாமல் உள்ளே திரும்பினான்; அர்களும் உள்ளே வந்தனர். காலை வண்டியிலோ வந்தே? ஆமாம்.” "தியாரென்று வந்திட்டியே?” ஆமா, மூக்காய் காயிதம் போட்டிருந்தாள்." என்ன மூக்காயியா? - ராகவன் உள்ளூர நடுங்கினான்; ராஜம்மா அந்தக் சரப்டை எடுத்து நீட்டினாள். அன்புள்ள அம்மாவுக்கு மூக்காயி எழுதுவது. இங்கே எனக்குக் கண்ணாலம் ஆவப்போவுது. எம் மச்சான் ஊருக்குப் போவப்போறேன், அய்யாவுக்கு நீங்க இல்லாமே ரொம்பக் கயிட்ட பமா இருக்காப்பிலே. தோணுது, நானும் நின்னு கிட்டேன். நீங்க புறப்பட்டு வரணும். குட்டி ராசா எப்படி இருக்கு? மூக்காயி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/16&oldid=1270192" இலிருந்து மீள்விக்கப்பட்டது