பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ணப்பித்தம் " }5 ராகவனுக்குக் கடிதத்தைப் படித்த பிறகுதான் நிம்மதி ஏற்பட்டது. - . மூக்காயிக்குக் கல்யாணம் ஆகப்போவுதா? என்னிடம் கூடச் சொல்லலையே.” <'எங்கிட்ட முன்னேயே சொல்லியிருக்கிறாள்.” சரி, உன்' விலாசம் அவளுக்கு எப்படித் தெரியும்?" மூக்காயிக்கு நம்ப வீட்டு விஷயம் பூராவும் நல்லாத் தெரியும். நீங்க இருக்கறப்போ மட்டும்தான் அவள் உணமை மாதிரி இருக்கிறா. ஆனா, பெரிய வாயாடி!”. சரி தான்.” ராகவன் சிறிதுநேரம் மௌனமாயிருந்தான். பிறகு சரி, வீட்டைப் பெருக்கிட்டு, அடுப்பை மூட்டு, நான் பத்து . மணிக்கு ஆபீசுக்குப் போகணும்" என்றான். ' ராஜம்மா' விளக்குமாற்றைத் தொட்டாள். ராகவன் சந்திரனைத் தூக்கிக்கொண்டு காய்கறிக் கடைக்குப் போனான். . போகும்போது அவன் மனம் “க்ஷ ணப்பித்தம்? ( Vணச்சித்தம்? என்று முனகிக்கொண்டது. ' 1949

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/17&oldid=1270193" இலிருந்து மீள்விக்கப்பட்டது