பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காணப்பித்தம் உங்கள் விளம்பரக் கருவியாக உபயோகப்படுத்தியிருக் கிறார்கள். காரணம்? உலகமே அவர்களுடைய சேவைச் சுழலுக்கும், ஜம்பர் பூரிப்புக்கும் மயங்கிவிடும் என்பது தானே?' அவன் மனம் அலை பாய்ந்தது. தற்கொலையும் பண்ணக் கூடாது. தன் எண்ணமும் நிறைவேற வேண்டும். இந்த நினைவுதான் அவனைப் போர் முனையில் சாடி நிற்கும் மகா சமுத்திரத்தில், ஒரு துளியாக ஒட்டிக்கொள்ளச் செய்தது. 'மெட்ராஸ் - ரெக்ரூடிங் ஆபீஸில் தன்wையம் அவன் பதிவு செய்து கொண்டான். பம்பாய்க்குக் கொடுத்த “ரயில்வே வாரண்ட்'டைக் கையில் வாங்கியவுடனேயே, 'பெண்ணுவகே இனி நம்மை அண்ட முடி உgr :து, போர்முனையில் துப்பாக்கி பிடிக்கச் செல்லும் சிப்பாய்க்கும், பூட்டணக் கரையில் பகட்டித் திரியும் பெண் ணிற்கும் பக்கத்திலேயா இருக்கிறது?' என்ற கரைகரண நம்பிக்கையும் உடன்பிறந்துவிட்டது. ஆனால், புதிதாக நுழையப் போகும் போருலகில் பெண் ணினத்தின் வாடை தட்டுப்படுமா, பட்டிருக்கிறதா சான்பது அவனுக்குச் சிறிதும் தெரியாது. நேரம் ஆக ஆக, அவனுடைய கசப்பான உண்மையின் வேகம் அதிகரித்தது. கண்காணா நம்பிக்கையோ, ஐஸ் கட்டியைப்போல, உருக ஆரம்பித்தது. காரணம்?

    • அதோ, வால்டாக்ஸ் ரோட்டில், அந்த வேப்பமரத்

அடியால், எத்தனையோ விதமான நிர்வாணப் படங்களைப் 2.ரப்பி வைத்துக்கொண்டு, எவனாவது ஏமாந்தவன் பச்சை குத்திக் கொள்ள வரமாட்டானா என்று குந்தியிருக்கிறானே, அவன்? அவனுக்கு இந்தப் புது உலகத்து அனுபவம் உண்டா ? போர்முனையில் சாடப்போகும் சிப்பாய் உலகத்தையே தன் பக்கம் இழுத்துவிடுகிறானே. அது எப்படி? அந்த ஆஸ்ட்ரேலிய ஸோல்ஜர் தன்னுடைய பரங்கி மார்பைத் நி றந்து காட்டிப் பச்சை குத்திக் கொள்கிறானே, எதற்காக? காசியினால் ஏற்படும் வேதனையையும் தாங்கிக்கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/20&oldid=1270196" இலிருந்து மீள்விக்கப்பட்டது