பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரக்தி ருப்பிட உணர்ச்சி ஏற்பட்டது. சிகரெட்டைத் தார எறிந்து விட்டு,கசந்த நாக்கைச் சப்புத்தட்டிக்கொண்டான், சுடுபட்ட விரலே, நாக்கு நுனியில் வைத்து, ஹிதம் பண் களிக்கொண்டே, மீண்டும் வெளியே தலையை நீட்டினான். - - ஆனால், அவனை அப்படியிருக்க, சுற்றுப்புறம் விட்டுக் கொடுக்கவில்லை. சொப்பன நினைவுடன் வண்டியை இழுத்துச் செல்லும் 'ஜட்கா'. குதிரை, எப்படி - வண்டிக் 'காரனின் லகானின் வெட்டிப்பினால், தன் நினைவுக்கு வந்து ஓடுகிறதோ, அந்த மாதிரி ஆயிற்று, அவன் நிலைமை. " ' சொப்பனக் கடலில் திளைத்து, எதிர்கால நினைவுத் திட்டத்தைத் தயாரித்து மகிழும் அவனை அந்த ஹிந்துஸ் தான் மெட்டு இழுத்தது. வேறு வழியின்றி, மீண்டும் "வண்டியினுள் பார்வையைச் செலுத்தினான். மேலே படிந் . . திருக்கும் மெது மண்ணை உதறிவிட்டு, வெளிவர முயலும் இளம் முளையைப்போல், யெளவனம் எட்டிப் பார்க்கும் இளம் பெண்ணொருத்தி பாடிக்கொண்டிருந்தாள், 'பிச்சைக்காரிதான். பிச்சைச் சோறு செல்லும் அதே தொண்டையிலிருந்துதான், அமுத கானமும் பிறந்து வந்தது. தனது. தாய்ப் பாஷையாகிய மராத்தியிலே. அவள் பாடிக் கொண்டிருந்தாள் . . ஆனால், அந்த வண்டியிலிருந்த ஒரு சிப்பாய்க்காவது அந்தப் பாட்டில், ரசிப்பு இல்லை. அந்த முக்காடு விலகிப் போன முகத்தில் ஒருவனுக்குக் கண். அவளுடைய கிழிந்து போன மேலங்கியின் வழியாய்த் தெரியும் இளமையின் விம்மல் பூரிப்பில் மற்றவனுக்குக் கண். வாடிப்போன சாம்பல் பூத்த பசி உதட்டில், ஒரு புன்னகை பூக்காதர் என்பதில் வேறொருவனுக்கு ஒரு கண் . ' "காட்டுக்கெரித்த நிலா'வாக, அவள் போட்டு வெளிவந்தது, அதற்குள் எங்கிருந்தோ தமிழிசை. அபிமானியான ஒரு - சிப்பாய் தமிழ்ப் பாட்டுப் பாடச் சொல்ல அவளை வேண்டிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/23&oldid=1270199" இலிருந்து மீள்விக்கப்பட்டது