பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடி எணப்பித்தம் டான், அவளும், **ஹலை மோதுதே! ஹலை மோதுதே! ஹரியாது ஹென் மனம்!” என்ற 'தமிழ்ப் பாட்டை 'ப் பாடினள், தமிழிசை அபிமானிக்கு உற்சாகம் கிளம்பி சுட்டது. அதற்குள், ஒரு மலையாள ஆசாமி, “ஆயிரம் பெண்களை ஞாங் கண்டிட்டுண்டு. இதுபோலொருவளை ஞாங் கண்டிட்டில்லா! என்று பாடினான். - இணர்களுடைய கிண்டலுக்கும், நையாண்டிப் பேச்சுக்கும் இவள்? ஆளாக வேண்டி வந்ததே யொழிய, கையில் சல்லிக் காசுகூட ஏறும் வழியைக் காணோம். - வன் மனத்தின் நம்பிக்கை மீண்டும் கரைய ஆரம் ' . *#பிச்சைக்காரியின் பாட்டையுமா, கிண்டல் செய்வது? உண்டைச் சோற்றுக்காக, மானமிழந்து, பிச்சையெடுத்துத் திரியும் பேதையிடமா, இவர்களுடைய சிப்பாய்த்தனத் தையும், துப்பாக்கிப் பார்வையையும் காட்டுவது? அவள் பாடினால், அதற்கு எதிர்ப்பாட்டா பாடுவது? “கெண்டை ஒழ் மானே! என் அண்டை வரலாமோ" என்று. பாடினானே அந்தத் தமிழ்ச் சிப்பாய்! தன் வீட்டில், தாயையும், சகோதசியையும் தனியே விட்டுவிட்டு வந்த உணர்ச்சியே இவர்களுக்கு மக்கிப்போய்விட்டதா? அவளும் அந்த மாதிரி, தானே. வுந்திருக்கிறாள்? இருவரும் பிழைக்க வந்தவர்கள். ஆனால், வழி (வேறு? அதையேன் இவர்கள் உணரவில்லை? ரெய்ச்சூர்' ஸ்டேஷனில் வண்டி நின்றது. சிந்தித்துச் சிந்தித்துச் சலித்த மனசுக்கு உற்சாகமூட்ட எண்ணிக் கீழே இறங்கி நாலு 'பூரியும்' பாஜியும்', 'கரம் சாவும் சாப்பிட்டான். அந்த வேளையிலுங்கூட, அவன் கண்ணும் மனமும் ஓயவில்லை . 'அதோ, அந்த 'இண்டர் கிளாஸ்' வண்டியில்...' அவன் மனம் அங்கு சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/24&oldid=1270200" இலிருந்து மீள்விக்கப்பட்டது