பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரக்தி 23 யாரோ ஒரு நர்ஸ்-ல (அவளும், அந்தப் புது உலகத்துப் (பேர்வழிதான்) ஒரு காக்கிச் சட்டைப் பேர்வதியின் {மார்போடு மார்பாய், முகத்தோடு முகமாய்...சே! அவன் மனத்தில் பழங்கால நினைவுகள் சினிமாப் படம்போல விரைந்தோடின, அவனும்தான் எத்தனை தடவை தன்

  • உயிர்க் காதலியுடன், இதேமாதிரி நிலைமையில் இருந்திருக்

கிறான்? ஆனால், அந்த உதட்டின் இனிமை அவலுக்குப் புளித்துப் போய்விட்டது.. புளித்துப் போன பழங்காடியின் வாசனை புட்டதுமே, முகத்தைச் சுளித்து, வெளிமூச்சு விடும் காளை மாட்டைப் போல, அவன் முகத்தைச் சுளித்துக்கொண்டான். , அவள் ஏன் இந்தப் பட்டாளத்தில் தன்னை ஒரு

  • நர்லாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்? போர்முனைப்

பணியிலே, பெண்னினமும் சேர வேண்டும் என்ற லட்சிய நினைவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சேர்ந்தாளா? பிளாரன்ஸ் நைட்டிங்கேல் , முதலிய பெண்மணிகளெல்லாம் கத்த முனையில் புரிந்த அருஞ் சேவைகளினால் தானே. புகழ் பெற்றார்கள், நாமும் ஏன் அப்படிப் பணிபுரிந்து புகழ் ப்ெறம் கூடாது என்ற எண்ணத்தோடு சேர்ந்தாளா? இல்லை --பழம் புராண காலங்களிலெல்லாம் பெண்களும் ஆணோடு கைகோத்து, யுத்த சேவை புரிந்தார்களாமே. தசரத சக்ரவர்த்திக்குக் கைகேயியும், கிருஷ்ண பகவானுக்குச் சத்ய பாமையும் வலது கையாக நின்று உதவி புரிந்தார்களாமே, அதுபோல் நாமும் புரியலாயே என்று தான் அந்த ஆணோடு அவ்வனவு ஒன் றிச் சேவை புரிந்துகொண்டிருக்கிறாளா? அதெல்லாயிருக்க முடியாது. அவளும் பெண். மாம்பழத்தின் உள்ளிருந்து குடையும் கருவண்டைப் போல, அவளுக்குக் கிறுகிறுப்பு ஊட்டும் அந்த இளமை வெறிதான் அவளை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறது. சே! போர் முனையில் பணி செய்துவந்த அவள் மனசிலுமா இப்படி --?*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/25&oldid=1270201" இலிருந்து மீள்விக்கப்பட்டது