பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி கையில், எவன் உன் அழகைப் பார்த்து மயங்கணும்?" கொஞ்சமும் யோசிக்காமல் ராஜாராம் இவ்வார்த்தைகளை வீசினான். . ஜானகியின் உள்ளம் ஒரு குலுங்கு குலுங்கிற்று , அவள் கையிலிருந்த ரோஜா மலரின் இதழ்கள் அங்க அதிர்ச்சியால், உதிர்ந்து விழுந்தன. அவளது கண்டிக் கன்னத்தில் குபீலென்று ரத்தம் பாய்ந்தது. ராஜாராயின் விஷ்ந்தோய்ந்த வார்த்தை அம்புகளின் தாக்குதலை 'அவளால் 'தாங்க முடியவில்லை. வெடிச் சப்தம் கேட்ட மான்போல், உள்ளே 'ஓடினாள், அவளது உள்ளம் நிலை கொள்ளாமல், நங்கூரமற்று, பாய்மரமொடிந்த படகைப்போல், வேதனைப் புயலில் தத்தளித்தது... நான் யாருக்காக அலங்காரம் செய்து கொண்டேன்* அவருக்காகத்தானே. அவருடைய களைத்த மனத்தில் ' களிப்பூட்டுவதற்குத்தானே. அவருடைய கட்டளையின் பேரில் தானே நானும் அலங்கரித்துக் கொண்டேன். கணவன் சொல்லைக் கடமையாக உணர்ந்து நடந்ததற்கா, இந்த அபவாதம்: 'எதுக்கு இத்தனை அலங்காரம்? - எலலை மாக்க?'-அப்பா! எவ்வளவு. கர்ண கடூரமான வார்த் தைகள், இவை! அவர் இதைக் . கொஞ்சமாவது உணர்ந்து கூறினாரா? ஒரு கணவன் தன் மனைவியிடம் பிரயோகிக்கும் வார்த்தைகளா, இவை? கடமையை உணர்ந்து பணிவிடை செய்ய எண்ணும் மனைவிக்கு - அளிக்கும் பரிசா, இவ்வார்த்தைகள்!...ஆனால்... ஆனால் ...! பணிவிடை: அவருக்குப் பணிவிடை செய்வது இப்படியா? இல்லை, ஆபீஸிலிருந்து களைத்து வீடு வந்து சேரும் அவருக்கு விச்ராந்தியாக இருக்க, நான் கட்டாயம் " காபி தயாரித்துக் கொடுத்திருக்க வேண்டும்? கடமையை மறந்து, களிப்பில் இறங்கிய 'எனக்கு இது வேண்டும்! ஆனால் இந்தச் சிறு தவறுக்கு இத்தனை பெரிய அபவாதமா?” ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/33&oldid=1270209" இலிருந்து மீள்விக்கப்பட்டது