பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி 33 களுமே... என்று எவ்வளவு; சாதுரியமாகப் பேச்சை இழுத் தார், அவர்', பாவி மனுசன்! தான் செய்த பழியின் பாவத் திற்கு, பங்காளியா சேர்க்கிறார்? ஆனால்........ <<ஆபீஸில் நடந்ததுக்கும், ஜானகியைக் கோபிப்பதற்கும் என்ன சம்பந்தம்? சே! அவளைப் பார்த்து என்ன சொல்லி விட்டேன். வீட்டிலே இருக்கிற அவள், களைத்து வரும் என்னை மகிழ்விப்பதற்காகத் தானே, அலங்கரித்துக் கொண்டாள். ஆத்திரத்தில், மனக்கசப்பில் - என்னவெல்லாமோ உளறிவிட் டேனே. "சினிமாவிற்குப் போகலாம். சாயந்திரம் தயா' ராயிரு” என்று நான் தானே சொன்னேன். என் சொற்படி. நடந்ததற்கு 1.மரியாதையா, இது? பாவம், அவள் பெண்ணல் 'லவா? என்னுடைய விஷ மூச்சில் பிறந்த வார்த்தைகளால் கருகிவிட்டாளே, அவள் யாருக்காக அலங்கரித்துக் கொள்ள வேண்டும்? எனக்கல்லாமல், வேறு யாருக்காக இருக்கமுடி, யும்? எனக்காகத்தான் அலங்கரித்துக் கொண்டாள். தாங்க முடியாத மனக்கசப்புடன் வந்த என்முன், திகட்டாத தேன் போல அலங்கார பூஷிதையாக வந்து நின்ற ஜானகியின் முன் ' னிலையில் ஏற்பட்ட உணர்ச்சிச் சிதைவினால், என்னத்தை கெல்லாமோ உளறிவிட்டேனே! எவன் மயங்க வேண்டும்? என்னைத் தவிர வேறு யாருக்கு இந்தப் பிரத்தியேக உரிமை உண்டு? போன வருஷம் நான் ஆபீஸிலிருந்து வரும்போது, நானே அவளுக்குப் பூ வாங்கிவந்து கொடுக்கவில்லையா? என் கரங்களாலேயே எத்தனையோ தடவை அதைச் சூட்ட வில்லையா? அந்த நாட்களெல்லாம் கனவா? இல்லை. 'ஆனால்..........!” - "மிஸ்டர் ராஜாராம்! ராஜாராம்!" தெரு வாசலிலிருந்து வந்த குரல், அது; 'ராஜாராமின் சிந்தனைச் சக்கரம் சட்டென்று - நின்றது.' . மாடி.ப்கிலிருந்து கீழே இறங்கி வந்தான், வருகிற வழியில் ஜானகியைப் பார்த்தான். அவள் ஜடையை அவிழ்த்துச் சாதக் கொண்டை போட்டிருந்தாள். அவள் தலை இருண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/35&oldid=1270211" இலிருந்து மீள்விக்கப்பட்டது