பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி பஞ்ச காலத்திலே, இவர்கள் கொடுக்கிற எண்பது ந..!ாய்ச் எந்த மூலைக்கு? 'வாங்காமல் இருக்கமுடியுமா?”

  • இருந்தாலும், மானம் வெட்கத்தை விட்டு .....

1 மா63;'த்தையும் வெட்கத்தையும் கவனித்தால், பெற்ற பிள்ளைகளை நடுத்தெருவில் விடவேண்டியதுதான் தம்பி !’’ ' ரYஜாராம் பெருமூச்சுவிட்டான். கல்யாண மய்யர் அசையாமலிருந்தார்.

    • தம்பி, என்னைப்பற்றி என்னமும் மனசில் வைத்துக்

கொள்ளாதே. இல்லையென்று சொல்லு தம்பி!” என்றார் கல்யாணமய்யர், ராஜாராமின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு. ராஜாராமுக்கு ஒன்றுமே ஓடவில்லை. நான் ஒன்றுமே நினைக்கவில்லை, ஸார்!” என்றன் சாந்தத்னத வருவிக்க முயன்று கொண்டு. கல்யாணமய்யர் விடை பெற்றுக்கொண்டு போய் வீட்டார். ராஜாராம் வீட்டினுள் நுழைந்தான். << தான் நடந்துகொண்ட அசம்பாவிதத்திற்காக ஹேட் கிளார்க் என்னிடம் மன்னிப்புக் கோரினார். நான் நடந்து' கொண்ட அசம்பாவிதத்திற்கு ஜானகியிடம் மன்னிப்புக் கோரவா?” அவன் உள்ளம் அலைபாய்ந்தது. ஜானகியிடம் பேசக்கூட அவனுக்குத் துணிவில்லை? கொஞ்ச நேரம் அசையாமல் அப்படியே நின்றான், * *ஜானகி யைச் சாந்தப்படுத்து! படுத்து!' என்று மனம் கதறியது, விறுவிறு என்று - ராஜாராம் சமையலுள்ளில் நுழைந் தான். ' ' <<காப்பி ஆயிற்று?” ரொம்பவும் தயக்கத்தோடு கேட்டான், முகத்தில் 41ழுதியிருந்த பீதியை 13றைக்க முயன்று கொண்டு. “ஆய்விட்டதே!” என்று காப்பியைக் கப்பில் எடுத்துக் கொண்டு, புன்னகையோடு வந்தாள் ஜானகி."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/37&oldid=1270213" இலிருந்து மீள்விக்கப்பட்டது