பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாணப்பித்தம் அவளும் அந்தப் 'பலரில்' ஒருத்தி, பாண்டி நாடு 4.புகுந்தால், பருவத்தை அடகு வைத்தாலது. பசியைத் தணித்துக் கொள்ளலாம் என்று எண்ணி வந்தவள். - அவள் நின்றுகொண்டிருந்தாள். முனையில் நின்ற வாறே, நாற் திசையிலும் பார்வையைச் செலுத்தினாள். அந்தத் தெரு'.............? தன்னை, 'கலாப மயில் என்று எண்ணிக்கொண்டு, 2பினுக்கிக் குலுக்கித் திரியும், இந்த வான்கோழி உலகின் நைட்டு நாகரீகத்தின் அழியாத சின்னம், அந்தத் தெரு; ஆபாசச் சாக்கடை, அது. அந்தச் சாக்கடையுள் பல் புழுக்கள் தெவிந்துத் தருளுகின்றன. வண்ணாத்திப் பூச்சிகளைப்போலச் சீவீ முடித்துச் சிங்காரித்துக்கொண்டு, 'சக்கரை மிட்டாய் ஸாதிகளை, உடம்பில் வளைய வளையச் சுற்றிக்கொண்டு, மனித உருக்கொண்ட் மிருகங்களின் ரத்தத்தை உறிய எதிர்பார்த்து நிற்கும், இந்தக் கிருமிகள், இந்தப் புழுக்களைப் பூங்கொடி என்று எண்ணி, அதை முகர்ந்து பார்த்துத் துன்புறுவார், பலர். அது ஒரு விபசார விடுதி; தேவடியாள் குடித்தெரு!' -, - இன்னும், அவள் அந்தச் 'சாக்கடை'யின் கரையோரம். நின்துகொண்டிருந்தாள். கால் எத்தனையோ மைனர்கள், மீசை நரைத்த பெரியார்கள், சுகிசரீரிகள், குஷ்டரோகிகள், ஏழைகள், குமாஸ்தாக்கள், பிரபுக்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறுவர்கள் இன்னும் எத்தனையோ பேர்கள் எல்லாம் ஆத்தச் சாக்கடையுள் முங்கிக் குளிக்க நுழைந்தனர். ஆனால், ஒருவராவது அவள் நிற்பதைக் கவனிக்கவில்லை; கண்ணிலே பட்..' (ஜட் விறைப்பாகச் சென்றனர், சிலர். காரணம்: அவள் ஒரு வண்ணாத்திப் பூச்சியல்ல், சிங்காரிக்க, அவளால் முடி LINாது; தெரியவும் தெரியாது.."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/40&oldid=1270216" இலிருந்து மீள்விக்கப்பட்டது