பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 . அவள் காலுங்கூட அலுத்துப் போய்விட்டது. மனமும் அலுக்க ஆரம்பித்தது. கடைசியில்- யாரோ ஒருவன் வந்தான். 'சாக்கடை”யுள் நுழையுமுன் தெரு முனையில் நின்ற அவனைக் கண்டுவிட்டான். கண்களும், முந்திய அநுபவமும் அது ஒரு அடிபடாத சரக்கு' என்று துவாம்பரமாக அளந்து காட்டிற்று. அவளும், அவனைப் பார்த்துவிட்டாள். வாடியிருந்த கொக்கிற்கு ஒரு உறுமீன் கிடைத்தது போலத்தான் இருந்தது, அவளுக்கு.. அவன் அவளிடம் நெருங்கி, அவளைக் கட்டிக்கொண்டு ' டே!ானான். மனிதக் கண்களின் 'கூரம்புகள் பாடி முடியாது' இருளில் இழுத்துச் சென்றான், அந்த இருள் நிறைந்த சாலையில், மனித நடமாட்டமற்ற ஒதுக்கத்தில் பேரம் நடந்தது : எவ்வளவு வேணும்?” ""ஒரு ரூபா கொடுங்களேன். " அவன் யோசித்தான். 'மீன்' தப்பிவிடுமோ என்று அவள் பயந்தான் ; சரி, சாமி நீங்க என்ன தான் தருவீக?” “ ஆறணா இன்னா.........” ரொம்பவும் . இழுத்துப் போட்டான். என்ன சாமி? கால்வயித்துக் கஞ்சித்தண்ணிக்காவது வேண்டாமா?" அவள் கண்களில் நீர் சுரந்தது. அந்த மிருகத் திற்கு அவள் வார்த்தைகளில் தொனித்த சோகத்தைக் கூட, உணரச் சக்தியில்லை. . கேவலம், ஜாண் - வயிற்றுக் காகத் தன் சடலத்தை இரவல் கொடுக்கிறாள் என்பது கூட,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/41&oldid=1270217" இலிருந்து மீள்விக்கப்பட்டது