பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vாப்பித்தம் . *'சரி, மகனி தூங்கிட்டானா?" என்று கேட்டான். - * அவன் அப்பவே தூங்கிட்டான். இனிமே என்ன? அவன் கவலையும் விட்டுது; உன் கவலையும் விட்டுது" என்று அக்கா "மனம் நிறைந்து கூறிவிட்டுப் பெருமூச்செறிந்து கொண்டாள். ', “சரி, நீ போ. நான் போய்க்கிடுதேன்” என்று கூறி '

  • உட்டு, மீண்டும் ஈஸிசேரில் சாய்ந்தான் சுந்தரமூர்த்தி.

நேரமும் தான் ஆச்சில்லே?” என்று கூறிக்கொண்டே அக்கா அங்கிருந்து அகன்று சென்றாள். ' . 'கந்தரமூர்த்தி #சேரில் படுத்தவாறு வானைப் பார்த் தான்; வானத்தில் ஒரே நட்சத்திரக் கூட்டம். ஒரே இருள். - இருளில் துளித் துளித் துவாரங்கள் பொத்துக்கொண்டது போல் நட்சத்திரங்கள் மினுக்கின. அந்த இருளுக்கும் நட்சத் திரங்களுக்கும் மேலாக, எதையோ யாரையோ தேடிப் பார்ப் பதுபோல் அவன் கண்கள் ஒரு கணம் கூர்மை' பெற்றன. மறுகணம் அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான். - கூடத்தில் பெட்ரோமாக்ஸ் லைட் புஸ்ஸென்று எரிந்து (கொன்டிருந்தது. காற்றுக் குறைந்து விட்டதால், விளக்கின் ஒளி 2மங்கிச் செத்து, சோகை பிடித்த மூஞ்சியைப் போல் பிரகாசமற்றும் காய்ந்து கொண்டிருந்தது. 'விளக்கின் மீது எண்ணற்ற அந்துகளும், ஈசல்களும் மோதி மோதி விழுந்து கொண்டிருந்தன. வீட்டுத் தாரிசாவிலும்... உள்ளிலும் 'டொன்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சீதை, மட்டும் இல்லாத அசோகவ னத்தின் ராக்ஷஸக் காவல் மாதிரி இருந்தது அந்தக் கோலம். - சுந்தரமூர்த்திக்கு அந்த விகார்க் காட்சியில் ஒரு கணம் கேட்ட, கண் நிலை குத்தவில்லை. உடனேயே எழுந்து சென்று காஸ்லைட்டின் பிடியைத் திருகி நெகிழ்த்தினான்; மூச்சை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/44&oldid=1270220" இலிருந்து மீள்விக்கப்பட்டது