பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு இழக்கும் பெட்ரோமாக்ஸ் ஆங்காரமாக உறுமிக்கொண்டு ஒளியைப் பறி கொடுத்து அடங்கியது. இருள் சூழ்ந்து பரவி, சுற்றுப்புறச் சூழ் நிலையெல்லாம் கட்புலனுக்கு மறைந்த பின்னால் சுந்தர மூர்த்தி மெதுவாக அடியெடுத்து வைத்து மாடிப்படியில் ஏறினான், மாடிக்குச் சென்று அறைக் கதவைத் தள்ளினான். கதவு தானாகவே திறந்துகொண்டாலும், திறக்கும்போது ஒரு தடவை முனகிக் கொண்டது. சுந்தரமூர்த்தி உள்ளே நுழைந்ததும் கதவைப் பழைய படியும் சாத்திவிட்டுத் திரும்பினான். அங்கு மரகதம் துள்ளித் தாவிக் கட்டிலிருந்து இறங்கி ஒதுங்கினாள். 'சுந்தரமூர்த்தி நேராக மரகதத்திடம் போய்விடவில்லை. " வெளியே பார்த்த ஜன்னலோரமாக நின்ற அவனும் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் மாதிரி . விசுக்கென்று திரும்பி நேராகக் கட்டிலில் வந்து உட்கார்ந்தான்; மரகதம் இன்னும் கொஞ்சம் ஒதுங்கி நின்று கொண்டாள். ' ' , கட்டிலில் புதிய தலையணைகளும், புதிய மெத்தை ஜமுக்காளமும் போடப்பட்டிருந்தன. அதன்மீது அப்போது அவன் பார்த்த. வானத்து நட்சத்திரங்களைப்போல, துளித் துளியாக உதிரிப் பூக்கள் சிதறிக் கிடந்தன. வானத்தை 'ஊடுருவிப் பார்த்தது போலவே, சுந்தரமூர்த்தி அந்தப் படுக்கையையும் ஊடுருவிப் பார்த்தான். எதிரே கிடந்த சிறு. பெஞ்சியில் ஆறிப் போய் ஆடை படர்ந்த பால் இருந் தது. பக்கத்தில் ஏதோ தின்பண்டங்கள். சுவரோரத்தில் இருந்த குத்து விளக்கு மரகதத்தைப் போலவே மூச்சு விடாமல் ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து கொண்டிருந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/45&oldid=1270221" இலிருந்து மீள்விக்கப்பட்டது