பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vணப்பித்தம் 64உட்காரேன்.” மரகதம் உட்காரவில்லை. நின்று கொண்டுதானிருந் தாள். சுந்தரமூர்த்தி கட்டிலில் இருந்தவாறே அவளை எட்டிப் பிடிக்க முயன்றன்; மரகதம் கூச்சத்தால் விலகியதும், 'அவனது கைக்குப் பதிலாக அவளது சேலையின் முன் தானை , இான் சுந்தர மூர்த்தியின் பிடிக்குச் சிக்கியது. பிடித்த பிடியை விடாமல் பற்றி இழுத்தான் அவன்; மரகதம் வேறு வழியின்றிச் சேலை செல்லும் திக்கில் தானும் திரும்பி வந்தாள், பக்கத்தில் வந்தவுடன் சுந்தரமூர்த்தி அங்காப் பற்றி உட்காரச் சொன்னான். கூசிக் குறுகிக் குன்றிய மரகதம் வேறு வழியின்றி அவனருகே உட்கார்ந் 33 * நரி * வேறு ', சுந்தரமூர்த்தி மெதுவாக அவள் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டான்; அந்த மிருதுவான கன்னிக் கரங்களின் ஸ்பரிச சுகத்தில் அவன் உடல் புளகாங்கிதம் அடைந்தது. இத்தனை காலமாக மனசில் தலை தூக்கி நின்ற பிரமச்சரியம் அந்த. 'ஸ்பரிச இன்பத்தில் - கரைந்தோடி விட்டது. தூங்கிக் கிடந்த ஆண்மை தன் முறுக்கை ஜெவ்வரம் காட்டி முறைத்துத் தொனித்தது... - பற்றிய கையை அழுத்திப் பிடித்தான் சுந்தர மூர்த்தி.

  • மரகதம், ஏன் பேசாம இருக்கே ?”

- பதிலில்லை. அவள் எதைப் பேசுவாள்? எப்படிப் பேசுவாள்? சுந்தரமூர்த்திக்கும் ஆண்மையின் உத்வேகத்தில் அசட்டுத்தனம் தெரியாமல் ஏதோ பேசினான். "' ""சரி, உனக்குப் பசிக்கிறதா? 'ஏதாவது சாப்பிடேன்” என்று தட்டிலிருந்த பண்டத்தில் ஒன்றை எடுத்து அவள் வாயருகே கொண்டுபோனான். அவள் வாயை மூடியவாறே தலையை ஆட்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/46&oldid=1270222" இலிருந்து மீள்விக்கப்பட்டது