பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு “சரி” என்று சொல்லிக்கொண்டே அதைத் தன் வாயில் போட்டுக்கொண்டான் சுந்தரமூர்த்தி, சிறிதுநேரம் சுந்தரமூர்த்தி ஏதேதோ பேசிக் கொண்டே மரகதத்தின் உடம்பில் செல்லச் சரசங்கள் ஆடிக்கொண்டிருந் தான். மரகதமும் கண த்துக்கு ஒரு கோணலாக உடம்பை: நெளித்துக் கொடுத்துக்கொண்டு பேசாது இருந்தாள். " குத்து விளக்குச் சுடர் எண்ணெய் சுவறி மெலிந்து வாட ஆரம்பித்தது; சிறிது நேரத்தில் திரி அழுவதும் விளக்கின் குளத்துக்குள்ளேயே எரிந்து கருகிச் சாம்பலாகி இருளில் அடங்கியது. இருள் சூழ்ந்ததும், சுந்தரமூர்த்தி மரகதத்தை மெது வாகத் தலையணையில் சாய்த்தான். கட்டிலுக்குக் கீழாகத் ' தொங்கிக் கிடந்த கால்களை மேலே எடுத்துவிட்டான், மறுகணம் சுந்தரமூர்த்தியின் முகத்தில் மரகதத்தின் சுடுமூச்சு உறைத்துக் கொண்டிருந்தது. சுந்தரமூர்த்தி, மரகதத்தின் கன்னங்களை இருட்டில் ' தடவித் தடம் கண்டு கொண்டிருந்தான்...........வெளியி லிருந்து ஓவென்று அழுகுரல் கேட்டது. -- “மணி முழிச்சிட்டான் போலிருக்கு” என்று சொல்லிக் கொண்டே சுந்தரமூர்த்தி தலையைச் சாய்த்தான். ஆனால்.......... வெளியில் அழுகைச் சத்தம் ஓயவேயில்லை. பப்பா!.. நப்பா! என்று மழலைக் குரலில் , அழுது கொண்டே முனகினான் மணி. “தூங்குடா கண்ணு, அப்பா வெளியே போ !!.கிருக்கு" சித்தே நேரத்திலே வந்துரும்", என்று. யரோ அவனைச் சமாதானப்படுத்தும் குரலும் கேட்டது. அது அக்காவின் குரல் தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/47&oldid=1270223" இலிருந்து மீள்விக்கப்பட்டது