பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு , அழுகை இன்னும் ஓயவில்லை. ஏங்கி ஏங்கி அழுது அழுது குழந்தையின் தொண்டைகூடக் கம்மிப் போய்விட்டது, அத்தனை அழுகையிலும் சிவப்பா.... அப்பா" என்று முனகல் முக்கல் எதுவும் குறையவில்லை. :: சுந்தரமூர்த்தியால் வெகு நேரம் இருக்க முடியவில்லை. “இரு வரேன்” என்று சொல்லிக்கொண்டே மாடிக் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினான். மாடிப் படியிலிருந்த வாறே அக்கா', அவனை இப்ப்டிக்கொண்டா” என்று கேட் - டான். ' அக்காவும் “வலுத்த பெயல். ஒய்ஜானா பாரு” என்று கூறிக்கொண்டே குழந்தையைச் சுந்தரமூர்த்தியிடம் ஒப்ப டைத்தாள். 'சுந்தர மூர்த்தியின் தோளில் சாய்ந்ததுமே குழந்தைக்கு அழுகை நின்றுவிட்டது. பாரேன். - இத்தனை - அழுகையும் எங்கேதான் போச்சோ?” என்று அதிசயித்துக் கொண்டே அக்கா திரும்பி விட்டாள். . . சுந்தரமூர்த்தி மணியைத் தூக்கிக்கொண்டு மாடிக்கு "வந்து சேர்ந்தான். சுந்தரமூர்த்தி வந்தவுடன் மரகதம் என்ன நினைத்தாளோ என்னவோ? ரொம்ப அழுதானோ?" என்று பரிதாபத்துடன் கேட்டாள். ஆமா” என்று பதிலளித்துவிட்டுக் கட்டிலில் உட்கார்ந் தான், சுந்தரமூர்த்தி. குழந்தை அங்கு நின்ற அந்தப் புது மனுஷியைக் கண்ட வுடன் மீண்டும் அழ ஆரம்பித்தது. சுந்தரமூர்த்தி **அழா" தேடா கண்ணு” என்று சொல்லிக் கொண்டே தட்டில் இருந்த தின்பண்டங்களை எடுத்துக் குழந்தையின் வாயில் ஊட்டினான். குழந்தை. மூக்கு வழியாக வடியும் சனியை உறிஞ்சிக் கொண்டே பட்சணங்களை மொக்க ஆரம் பித்த து..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/49&oldid=1270225" இலிருந்து மீள்விக்கப்பட்டது