பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ஷணப்பித்தம்

    • நீ ஏன் நிக்கிறே? வந்து படுத்துக்கோ ” என்றான் சுந்தர

மூர்த்தி . மரகதம் வந்தாள், உட்கார்ந்தாள்.

  • படுத்துக்கோ .”

மரகதம் படுத்துக் கொண்டாள், சுந்தரமூர்த்தி தின்பண்டத்தையும் பாலையும் குழந்தைக்கு. கோட்டிவிட்டு, தனக்கும் மரகதத்துக்கும் இடையில் குழந்தை கயைப் போட்டுத் தட்டிக் கொடுத்தான். குழந்தை அழாவிட் டாலும் தாங்க மாட்டாமல் சாதித்தது. அவன் தட்டிக் கெx7($ப்பதை எப்போது நிறுத்தினாலும், அது உசும்பி எழும். பியது. எனவே சுந்தரமூர்த்தி தானும் குழந்தையின் 2.பக்கத்தில் குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்தவாறே. கண்கxை மூடினான். குத்து விளக்குச் சுடர் இன்னும் எரிந்து கொண் ட்டிருத்தது. - மரகதம் கட்டிலோரத்தில் ஆடாமல் அசையாமல் படுத். திருந்தாள். தட்டிக் கொடுக்கும் ஓசையும், குழந்தையின் உசும்பலும் நின்றுவிட்டது என்று தெரிந்தவுடன் அவள். (மெதுவாக எழுந்து சுந்தரமூர்த்தியின் முகத்தைக் 'குனிந்து' பார்த்தாள். பிறகு நேராகக் குத்து விளக்கருகே சென்று அதைக் குளிர வைத்துவிட்டுத் திரும்பினாள். . சுந்தரமூர்த்தி திடுக்கிட்டு விழித்தெழுந்தான். தான் எப்போது தூங்கிட்ட போனோம் என்பதே அவனுக்குத் தெரிய வில்லை. கழுத்தில் இளம் ஸ்பரிச சுகம் பட்டதும், அவன்

    • மரகதம்” என்று கூறிக் கொண்டே அந்தக் கையைப்

பற்றினான், அது குழந்தையின் கை, மறுகணம் அவன் கை படுக்கையைத் துழாவியது. மரகதத்தைக் காணவில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/50&oldid=1270226" இலிருந்து மீள்விக்கப்பட்டது