பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 1. **மரகதம்?' என்று மெதுவாகக் கூப்பிட்டுக் கொண்டே கீழே இறங்கினான். - கீழ் வீட்டிலிருந்து கடிகாரம் ஐந்து மணி அடித்தது. எங்கோ ஒரு சேவல் கூலி ஓய்ந்தது. வெளியே பார்த்த ஜன்னல் ஓரத்தில் மரகதம் படுத் திருந்தாள். விடி நிலவின் மங்கிய ஒளித் துண்டம் அவள் மீது அப்பிக் கிடந்தது. அவள் அயர்ந்து தாங்கிக்கொண் டிருந்தாள். . மரகதம்! சுந்தரமூர்த்தியின் கை பட்டதுமே அவள் - திடுக்கிட்டு விழித்தாள். <<இங்கே ஏன் படுத்தே? பனி , விழுமே” என்றான் சுந்தரமூர்த்தி. மரகதம் எழுந்து உட்கார்ந்து ஆடையை ஒழுங்கு செய் தாள்.. “சரி. பொழுது விடிஞ்சிட்டுது. நீ வேணுமானா, கீழே - போ” என்றான். . 'மரகதம் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து எழுத்து அடி 'பெயரும் ஓசைகூடக் கேட்காமல் வாசலுக்குச் சென்றாள். திறந்து மூடிய கதவு - முனகிக்கொண்டது மட்டுமே கேட்டது. அ ந்தர மூர்த்திக்கு" மரகதம் இரண்டாவது மனைவி, அவனது முதல் மனைவியான சங்கரவடிவு சுமார் எட்டு மாச காலத்துக்கு முன்னால் கiyலமாகிவிட்டாள். அவள் , இறந்தபோது சுந்தரமூர்த்தியின் : செல்வச் சிரஞ்சீவிப் புத்திரப் பேறான மணிக்கு. வயது ஒன்று முடிந்து ஒரு மாதம். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/51&oldid=1270227" இலிருந்து மீள்விக்கப்பட்டது