பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூணப்பித்தம் சுந்தரமூர்த்திக்கு இப்போதும் வயசு ஒன்றும் அதிகமாகிவிடவில்லை; அநேகமாக முதற் கல்யாணம் பஸ்' ணிக் கொள்கிற வயசுதான். முப்பதை இன்னும் தாண்டவில்லை. என்றாலும் கடந்த மூன்றாண்டுக் காலமாக அவன் பெற்றிருந்த அனுபவம் இன்னொரு முப்பது விருஷத்துக்குக் காணும். - சக்கரவடிவு அப்படி ஒன்றும் அழகியில்லை. என்றாலும் 'அவ:னச் சுந்தரமூர்த்தி மனம் விரும்பித்தான் கல்யாணம் செய்துகொண்டான். கல்யாணம் பண் ணிய முதல் விரும்-இடையிலே ஒரு மூன்று மாதக் கருச் சிதைவு ஏற்பட்டபோதிலும்கூட அவர்கள் இருவருக்கும் மிகுந்த ஆனந்த - மயமாய்த்தானிருந்தது. : அவர்கள் , இருவரும் ஒருவருக்கொருவர் சொர்க்கமாகத் தோன்றி ." ஆனந்தம் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அடுத்த விருஷ மத்தியில் தான் மணி பிறந்தான். ஆனால் மணி பிறந்தபோது அவள் பிரசவத்திலேயே மிகவும் கஷ்டப் பட்டுப் போனாள். அப்போது நொம்பலப்பட்டுப் போன உடம்பு பின்னால் அவள் மரணமடையும் வரையிலும் (கொஞ்சம்கூடத் தேறவில்லை. அதற்குக் காரணம், பிரசவம் கழிந்த சில மாதங்களிலேயே அவளுக்கு உள்ளுக்குள்ளாக , எப்போதோ பற்றியிருந்த சு.ரோகம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது, க்ஷயரோகம் என்றதுமே சுந்தரமூர்த்திக்குக் குலை நடுங் கியது. அந்த நோயிலிருந்து அவளை எப்படியாவது மீட்டாக வேண்டும் என்று அரும்பாடு பட்டான். அவனுக்குப் பண் வசதியும் அப்படியொன்றும் கிடையாது. ஏதோ மாதா மாதம் சம்பளப் பணம் என்று ஆபீசில் எண்ணிக்கொடுப்பது அவன் குடும்ப நிர்வாகத்துக்குப் போதுமானது என்பதைத் தவிர, வேறு வகையில் அவனுக்கு , எந்த - ஆஸ்திதியோ பிதிரார்ஜிதமோ கிடையாது. கல்யாணத் துக்குக்கூட, கடன் வாங்கித்தான் நடத்த வேண்டியிருந்தது. இருந்தபோதிலும் அவன் படாத பாடுபட்டு இருக்கிற ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/52&oldid=1270228" இலிருந்து மீள்விக்கப்பட்டது