பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு சி! தகைகளை ஒன்றிரண்டாக விற்று, இரண்டு மூன்று இடங் களில் கடனும் வாங்கிச் சங்கரவடிவின் உயிரை மீட்பதற்காக அரும்பாடுபட்டான். - - சுற்றுச் சூழக் கடன், வீட்டிலே கைக்குழந்தையைப் பார்க்கக்கூட ஆளில்லாத சங்கடம். ஆபீஸில் கெடுப்பிடி, நாளாக நாளாக வரவும் செலவும் . ஒத்துப் போகாத இழுபறி இத்தியாதி - சங்கடங்களோடும், 'சுந்தரமூர்த்தி மனத்தைத் தளரவிடாது சங்கரவடிவின் வாழ்க்கை உத்தார எண்ணத்துக்காக மன்றாடிக் கொண்டிருந்தான். ஆனால், அவள் முயற்சியெல்லாம் முடிவில் விழலுக்கிறைத்ததாகவே முடிந்தது.. . . "சங்கரவடிவு ஒருநாள் இரவு அமைதியாகக் கண்களை மூடி விட்டாள். மனைவி இறந்தவடன் - அவனுக்கு அழக்கூடத் திராணியில்லை; மனசு அத்தனை தூரம் மரத்துப்போயிருந் தது. கடைசிக் காலத்தில் அவள் கஷ்டப்படாமல் போய் விட்டால் நல்லது என்றுகூடச் சில வேளை நினைத் திருந்தான், சங்கரவடிவு காலமானவுடன் அவனுக்கிருந்து மன்நிலையில் ' எங்காவது தேசாந்திரியாகக்கூடப் போயிருப் பான்; ஆனால் காலில் கட்டிய தளை மாதிரி போனவன் ஒரு பிள்ளையையும் போட்டுவிட்டுப் போனது ஒன்று தான் அவனை இந்த உலகோடு ஒட்ட வைத்திருந்தது. மனைவி இறந்தவுடன் குழந்தையைப் பராமரிப்பதே அவனுக்குப் , ' பெரும் சங்கடமாயிருந்தது. இருந்தாலும் வாழாவெட்டியாக இருக்கும் தன் ஒன்றுவிட்ட அக்காளின். உதவியினால், குழந்தையை ஓரளவு கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்தான். சங்கரவடிவு இறந்தவுடனேயே அவனை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி. அக்காவும் ஊரிலுள்ளவர்களும் வற்புறுத்தினர். என்றாலும் இல்லற வாழ்க்கையில் முதற்படியிலேயே அமையடி வாங்கி மரத்துப் போன அவன் உள்ளத்தில் இரண்டாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/53&oldid=1270229" இலிருந்து மீள்விக்கப்பட்டது