பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு - 53 மாகக் கண் முன் நிற்பதுபோலத் தோன்றினாலும் எத்தனையோ யுகக்கணக்காய் அனுபவித்த வேதனையாகத் தான் தெரிந்தது. என்றாலும் மரகதத்தைக் கைபிடித்தபோது அவன் மனசில் எத்தனையோ சந்தேகங்கள் அலைக்கழிந்து கொண்டிருந்தன. ' குழந்தைக்காகத்தான் நான் மணந்துகொள்கிறேன். என்றலும் மரகதம் குழந்தையை எப்படிக் கவனிப்பாளோ? "என்ன இருந்தாலும் பெற்ற தாய்க்கு வருமா? இவள் குழந்தையைச் சரியாகக் கவனிக்காவிட்டால்...? - ... ' << இல்50 றத்திலேயே பிடிப்பற்றுப் போனபின் மீண்டும் 'மனாந்து கொள்கிறேன். குழந்தையின் நன்மை 'என்று கூறி, கட்டிய மனைவியின் நன்மையை தான் பிறந்து விட 10டியுமா? அவளும் சின்னஞ் சிறிசு, என் ெசன்னலே இன்பக் கனவுகளோடு தான் என் வீட்டுக்கு வருகிறான். அந்தக் கனவுகள் என்னால் பாழடைந்துவிடக்கூடாது, ஆனால் அந்த ஆசைக் கனவுகளுக்கு இந்தக் குழந்தையே முட்டுக் கட்டையால் ........?" அப்படியானால் தான் மரகதத்திடம், திருப்திகரமாக நடந்தால் தான் . அவளும் குழந்தையிடம் - திருப்திகர.0:ாக நடந்து கொள்வாள். அப்படியானால் தான் நான் என் குழந்தைக்கும் மனைவிக்கும் துரோகம் இழைக்காமல் வாழ முடியும்.” சுந்தரமூர்த்தியின் மனசில் இப்படி என்னவெல்லாமோ தோன்றித்தோன்றி மறைந்தன, ஆனால் அவன் தன் புது மனைவியைச் சந்தித்த அன்றிரவி லேயே, அந்த முதல் சந்திப்பிலேயே குழந்தை குறுக்கிட்டு, அந்தச் சந்திப்பின் இங்கிதத்தைப் பாழ்படுத்தி விட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/55&oldid=1270231" இலிருந்து மீள்விக்கப்பட்டது