பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலாட்டு 57 ஆனால், அது என்ன செய்யும்? அது அறியாத குழந்தை, அப்பாவைப் பிரிந்து இருக்கச் சகிக்காத குழந்தை. அப்பாவை நான் பிரித்துக்கொண்டு போய்விட்டேன் என்று அது அழுததா? அதற்கில்லாத உரிமை எனக்கு ஏது? தான் நேற்று வந்தவள். அது அவரின் பிரதிபிம்பம்; ஜீவட் பகுதி எனவே அதைப் பகையாடுவதற்கு நான் யார்? எனக்காக அவர் என்னை மணந்துகொண்டாரா? இல்லை அவருக்காகவா? பார்க்கப் போனால், இந்தக் குழந்தைக்காகத்தானே அவர் என்னை மணந்துகொண்டார்?........" மரகதம் தன் மனசுக்குள்ளாக எத்தனையோ எண்ணி னாள், அவள் கண்ட முடிவெல்லாம் குழந்தையின் அன்பை முதலில் வென்றால் தான், பின்னர் கணவனின் அன்பை வெல்ல முடியும் என்பதுதான். ஆனால் சுந்தர மூர்த்தியோ மனைவியின் அன்பை வென்றால் தான் குழந்தையின் அன்பை அவள் வெல்லுவாள் என்று தான் கருதினான், இருந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் பல மாத காலமாக அறிந்துகொள்ளவில்லை, இன்று "சுந்தர மூர்த்தி இரவு ஒன்பது மணிக்குமேல் தான் வீட்டுக்கு வந்தான்; எங்கேயோ சினிமா பார்த்து விட்டு, வரும்போது, மரகதத்துக்குப் பூவும், 3மணிக்கு மிட்டாயும் வாங்கிக்கொண்டு வந்தான். .: வீட்டுக்குள் நுழைந்ததுமே " ஏன். இத்தனை நேரம்?” என்று கரிசனையோடு விசாரித்தான் மரகதம்.' ஏன், மணி. தேடினானோ? ' இல்லை, நான்தான் தேடினேன்.” “அவன் தூங்கிவிட்டானா?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/59&oldid=1270235" இலிருந்து மீள்விக்கப்பட்டது