பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் இந்தச் சுக வேதனை அவளுக்குப் பிடிக்கவில்லை, என்றாலும், அவள் எழுந்திருக்கவில்லை. மனம் நிமிர்ந்தாலும் உடல் நிமிரவில்லை . மல்லாந்து படுத்து உடம்பைத் தளர்த்தி: உயர்ந்து கிடக்கவேண்டும் என்ற சிறு ஆசை இருந்தாலும், அந்தரங்கம் சிறிதுமில்லாத அந்த வெட்ட வெளியில் அப்படிப் படுக்க அவள் மனம் இசையவில்லை. எனவே மணலில் ஒருச்சாய்த்து படுத்துக் கையில் தலையைத் தாங்கி யோக நித்திரை புரிந்தாள், உடலின் கன அழுத்தத்துக்குத் தக்கவாறு நெளிந்து குழைத்து கொடுக்கும் அந்த 20ணற் படுக்கை அவளது உடம்பின் துடிதுடிப்பைச் சமனப்படுத்தும் . துணைபோல ஒட்டிப் படுத்திருந்தது. : .. படுத்தலாறே அவள் கடலின் பசைபிடித்த இருளை யும், அதில் வகிடு பாய்ந்து தாவும் அலைத்திரளையும் பார்த்தான்.' அந்தப் பார்வையில் கண்கள் மட்டுமே பதிந்தன, அர்த்த மற்ற பார்வை; பிறந்த குழந்தையின் பேதனம் நிறைந்த பார்வை, " மணலைக் கையால் அள்ளிக் குவித்து அளைந்துகொண்டது ருத்த அவளது மனம் கோவையற்ற தெளிவற்ற புல், நினைவுக் கண்ணிகளை அவிழ்க்க முடியாமல் சுற்றிச் சுற்றி அலைக்கழிந்தது. தன் வாழ்விலும் உடம்பிலும் சில மர்தி காலமாக ஏற்பட்டிருக்கும் சலனத்தை அவள் உணரலாம் லில்லை. என்றாலும், அதன் காரண காரியத்தைத் தெளிந்து விடை காணமுடியவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளில் தேய்ந்து உருவற்றுப் போனதாக அவள் கருதிவந்த அந்தச் சரீர வாதை மீண்டும் தலை தூக்குகிறதோ, என்று ஒரு சந்தேகம். . “இருந்தாலும் இந்த வயதிலா??? இதுதான் அவளுக்கு விளங்காத புதிர்: -- - நிர்மலா யுவதியல்ல. அந்தப் பருவம் எப்போதோ கழிந்துவிட்டது. இப்போது அவள் ... அந்தப் பருவத்தை எப்படிச் சொல்வது? இலக்கண ரீதியாகச் சொன்னால், அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/63&oldid=1270239" இலிருந்து மீள்விக்கப்பட்டது