பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அஷ்ணப்பித்தம் தெநிலைப் பருவத்திலிருந்து பேரிளம் பெண் பருவத்துக்கு மாறிவரும் பெண் ராசி. பேதைப் பருவம் அழிந்து பெண்மையின் வரப்பிரசாத 4.!'ன திராட்சைக்குப் பக்குவமாகும் அந்த வாலை வயதில் ஆள் இதே மாதிரியான ஆத்ம நிராசைக்கும், உடற் பார. 2.wைர்ச்சிக்கும் ஆளாகியிருக்கிறாள். ஆனால் இப்போது அவன் மனசிலுள்ள வேதனை புரிபூரண நிராசையல்ல. ஒரு வேல் அ.தி ஆசையின் கறைதானா? ஆனால், இந்த வயதில் கந்த மாதிரியான வேதனை உண்டாவானேன்? மலரும் போதும் வேதனை. கூம்பும்போதும் வேதனையா? "தாய்மைக் குணம் தன்னுடம்பை விட்டுச் சில காலமாகக் கரைந்தோடி இற்று வருந்துதான் காரணமா? அல்லது தான் அதுவரை கன்னிமை அழியாமல் தாய்மைக்கு அடிமையாகாமல் அந்தப் பருவத்துக்குத் துரோகம்னழத்த காரணமா?. . இதைத்தான் அவனால் புரிய. முடியவில்லை. அவளும் ஒரே ஒரு தடவையேனும் அனுராக சுகவேதனையை அனு 13வித்திருந்தால், வயிற்றில் பாரமேற்று அறிந்திருந்தால் இந்தப் புதிர் அவளுக்கு - லகுவில் விளங்கியிருக்கக் கூடும். ஆனால், அவளோ இந்த முப்பத்து ஏழாவது வயதிலும் ஒரு கன்னி! எனவே, அந்த நிலைமை உபாதையாக இருந்தது. இருந்தாலும், நமைச்சல் தரும் புண்ணிலிருந்து ரத்தம் கொட்டும் போது ஒரு சுக நிவர்த்தி இருக்குமே, அதுபோன்ற ஒரு உணர்ச்சி அவளுக்கு அவ்வப்போது ஏற்படும். முன்னெல் லாம் அந்த உணர்ச்சி ஏற்படும்போது, அவள் அதை எதிர்த்துப் போராடுவாள்; வெற்றியும் காண்பாள். இன்றே போராடவே சக்தியில்லை. அது மட்டுமல்ல; அந்த உணர்ச்சி ஓட்டத்தை எதிர்த்து நீந்த முடியாமல் அதன் போக்கிலேயே மிதந்து செல்வதில் சுகம் இருப்பதாக ஒரு திருப்தி. அவள் அந்தச் சுகத்தை , உதறித் தள்ளவில்லை. இருந்தாலும் வைராக்கிய சித்தம் இருக்கிறதே, அது அவளைக் கரை யேறச் சொல்லிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/64&oldid=1270240" இலிருந்து மீள்விக்கப்பட்டது