பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் " எனவே புதிருக்கு அவள் விடை தேடினாள். இருந் தாலும், முடிவு காணவில்லை. அது அவளால் முடியாது. வேறு வழியின்றித் தன் சிநேகிதி கம்னாவை நாடிச். சென்றாள். கமலா ஒரு லேடி - டாக்டர், அவளுக்கு நிர்மல;rலை ஆதிமுதல் தெரியும்; அதாவது, அவள் மனசின் பாவோட்டத் தின் அலைக்கழிப்பைத் தெரியும். நிர்மலாவின் 'வைராக்கிய சங்கடத்தால் ஏற்படும் - தொல்லைகளுக்கு அவள் தான் வைத்தியம் செய்தாள்; ஆலோசனையும் கூறினாள். என்றாலும், நிர்மலா தன் வைராக்கிய சபதத்தில் வெற்றி கண்டு விட்டதாகக்கூட, அவள் கருதினாள். அதனால் நிர்மலா தன் உதவியை நாடி வந்தது அவளுக்கு ஆச்சரியத்தைத்தான் தந்தது. கமலாவுக்கு நிர்மலாவின் *நோயைப் புரிந்துகொள்ளச் சிரமமேற்படவில்லை." நிர்மலா, இந்த வைராக்கியத்தை இப்போதாவது தளர்த்தக் கூடாதா?” என்றாள் கமலா. - 'தளர்த்துகிறதா? இந்த வயதிலா? இந்தப் பதிலே புதிது. அந்தப் பேச்சை எடுத்தாலே வெட்டி முறித்துப் பேசும் நிர்மலாவா இப்படி? கமலாவுக்கு உண்மை லேசாகப் புலப்படுவது மாதிரித் தோன்றிற்று, . . நிர்மலா, நான் சொல்கிறேன் என்று கோபிக்காதே.' உடம்பு நனையாமல் நீந்த முடியுமா? பின் ஏன் நீந்தும்போது உடம்பே நனையவில்லை என்று. எண்ணி. உன்னையே ஏமாற்றிக் கொள்கிறாய்?” 'என்து கேட்டாள். கமலா . . . . “நீ என்ன சொல்கிறாய்?” என்று புரியாமல் கேட்டாள் நிர்ம லா ... ".!! ' . ' .' 44jரியவில்லையா?: இரும்பு, வைராக்கியம் வளைந்து கொடுக்கும்; உருக்கேர் ஒடித்துவிடும். நிர்மலா! உன் வைராக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/65&oldid=1270241" இலிருந்து மீள்விக்கப்பட்டது