பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் 65. அவள் நெஞ்சை விட்டு இன்னும் மறையவில்லை. அப்போது அவள் நல் 50 யுவதி. மாணவர்களும் அவளுக்குச் சம் வயதானவர்கள். அவர்கள் பாத்தியில் பழகுவதற்கே கூச்சம். அவள் எது நேர்ந்துவிடக் கூடாது என்று பயந் தாளோ, அதுவே நேர் இருந்தது. ஒரு வாலிப ஆசிரியரே அவளிடம் ஒருமாதிரியாக நடக்கத் தலைப்பட்டார். அவளும் கூடத் தடுமாறியிருக்கக் கூடும். ஆனால் தப்பித்துவிட்டாள். வேலையை ராஜிநாமாச் செய்தாள். அதன் பின்னர் ஆண்கள் கல்லூரியில் 'சான்ஸ் கிடைத்தாலும், வேலை ஒப்புக்கொள்ள வில்லை . - ஆனால் இது ஒன்று மட்டும் சோதனையல்ல. அவள் வாழ்க்கையில் பல சோதனைகள். அவள் வாழ்க்கையே ஒரு சோதனை தான். அந்தச் சோதனையில், அவள் உள்ளம் வைரம் பாய்ந்தது. ஆனால், இப்போது அவள் இந்தக் கல்லூரியில் வேலை ஒப்புக்கொண்டது சோதனையில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தைரிய உணர்ச்சியாலல்ல; அந்த மாதிரிச் சோதனைக்கு இடம் தரும் பருவம் கடந்துவிட்டது என்ற தைரிகம், வாஸ்தவம், இன்று வேறு யாரும் அவளைச் சோதிக்கவில்லை. ஆனால் அவளே அவளைச் சோதித்துக் - கொன்டிருந்தாள். கல்லூரி மாணவர்களுக்கு அவளைப் பற்றி அத்தனை அக்கறையில்லை, அதாவது ஒரு ஆண் மகனின் கர்மசிரத்தை இல்லை. அவள் ஒரு மிஸ்ஸா , இல்லை, * மிஸிஸ்ஸா என்பது கூடப் பலருக்குத் தெரியாது, இருந்தாலும் அவளைப் பற்றி அவர்கள் பேசுவார்கள். அது வெறும் பேச்சு. வேறு. பாதிரி யான பேச்சு. நிர்மலா கன்னி தான். புதுப் பாத்திரமானாலும், உபயோகிக்காவிட்டால் ' களிம்பேறி - விடுகிறதல்லவா? - அது மாதிரி.. அவள் சரீரம் மினுமினுப்பு இழந்து, மாவைச் சந்தைக்கு, வரும் காய்கறிபோல் வாட்டம் கண்டிருந்தது. ஒடிசலான உடம்பு. எந்தத் திசையிலிருந்து பார்த்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/67&oldid=1270243" இலிருந்து மீள்விக்கப்பட்டது