பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- திரிசங்கு சொர்க்கம் - 57 களைப்போல், 'அத்தர் 1மணத்தைப் போல் ஒரு போதை தரும். சந்தர்ப்பவசமாகச் சீதாராமனுக்கும், நிர்மலாவுக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. அவன் கவி ; அவள் சுவிப் பைத்தியம், கேட்பானேன்? சீதாராமன் பாடிக் காட்டும் கவிகளில், நட்சத்திரங்கள் உதிர்ந்தன! புறாக் கூட்டம் சிறகடித்தன! அந்தி நேர மந்தாரை' கட்டவிழ்ந்தன!-- எல்லாம் அவள் ரசனை முறைகள், . . அவள் அந்தக் கவிகளை எப்படி யெல்லாமோ ரசித்தாள். சொல்லப் போனால்; கவிதை யைக் கொண்டு சீதாராமன் நிர்மலாவை அடிமை கொள் டான், களியைக் கண்டு நிர்மலாவும் சீதாராமனை விரும் பினாள். அவளுக்கு அவனே துஷ்யந்தன். அவனே சந்திரா பீடன். அவனே கசன்; அவனே ரோமியோ; அவனே அந்தொனி!... ஆனால், "சீதாராமன் அவளிடம் மனிதனாக' நடந்து" கொள்ளவில்லை. கலியாகத்தான் நடந்து கொண்டான். அடு இளமையின் கோலம். அவன் கலி; தென்றலையும் தேனையும், குயிலையும் மயிலையும் அவளிடம் கண்டான். அவள் - கன்னி மைலய அவன் குலைக்க விரும்பவில்லை. அதனால், காதல், அதாவது எட்டி நின்று விளையாடும் லட்சியக் காதல் என்ற சொப்பன சொர்க்கத்தில் இருவரும் முயங்கிக் கிடந்தனர். காலம் வளர்ந்தது. சீதாராமன் மனிதனானான், - சரீர உணர்ச்சி மேலோங்கியது. ... நிர்மலாவின் கன்னிமையைக் களவாட விரும்பினான். "நிர்மலா தன் புனிதத்துவத்தைக் குலக்க விரும்பவில்லை. ஆனால், மந்திர கோஷங்களோடு தன் கன்னிமையை ஒப்படைத்து, மாங்கல்ய பலத்தில் - அந்தப் புனிதத்துவத்தைக்கொண்டு செலுத்த நினைத்தாள், அதற்குச் சீதாராமன்' தயாரில்லை. எனவே" -இரு துருவங்களும் வெவ்வேறு திசையிலே திரும்பின.. சீதாராமன் வேறொருத்தியை மணந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/69&oldid=1270245" இலிருந்து மீள்விக்கப்பட்டது