பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால், இந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை ஒப்புக்கொண்ட தினத்தன்று மீண்டும் அவள் மனதில் ஆன்ம விசாரம், உணர்ச்சிப் போராட்டம் ஆரம்பித்தது. அது வாவிடப் பருவத்தின் கனவு நிலையில் ஏற்படும் இளம் போர் அல்ல. செத்து மடியப்போகும் தாய்மை உணர்ச்சியின் அந்திமப் போராட்டம். பெண்களின் வாழ்வில் இரண்டாவது முறையாக, இரண்டுங் கெட்டான் வயதில் எழும் காதல் , போராட்டம். . ' முதல் நாளன்று கல்லூரி வகுப்புக்குச் சென்றபோதே அந்தப் போராட்டம் துவஜம் கட்டினீட்டது. அது ஜூனியர் - இண்டர் வகுப்பு, வகுப்பிலுள்ள மாணவர்களை அறிமுகப் படுத்திக்கொள்வதற்காக, அவள் ஒவ்வொருவர் பெயரையும் வாசித்து, அவர்களை எழுந்து நிற்கச் சொன்னாள். பையன்கள் ஒவ்வொருவராக எழுந்திருந்து அமர்ந்தனர். ' ' .

ரங்கநாதன்;>> ரங்கநாதன் எழுந்து நின்றான். -- - - நிர்மலா நிமிர்ந்து பார்த்தாள். அவள் நெஞ்சில்

  • சுளுக்குவது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. அதோ

நிற்பது ரங்கநாதனா அல்லது சீதாராமஞ* இது அல்ள் திகைப்பு. 'இதோ நிற்கும் பையன் இளைஞன். ரங்கநாதன்! சீதாராமனாயிருந்தால், இந்த பதினைந்து ஆண்டுகளில் எவ்வளவோ மாறியிருக்கவேண்டுமே. ஆனால்--: ரங்கநாதன் சீதாராமனைப் போலவே இருக்கிறான். அதே. முகச்சாடை, அதே குரல். அந்தக் கூரிய மூக்குக்கூட என் கண்முன் நிற்கிறதே!...' ' ' நிர்மலா ரிஜிஸ்டரை மூடிவைத்தாள். அதற்குமேல் எந்தப் பெயரையும் வாசிக்கவில்லை. அவள் மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/71&oldid=1270247" இலிருந்து மீள்விக்கப்பட்டது