பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 க்ஷணப்பித்தம் மீண்டும் ஏதோ உறுத்தியது. ரிஜிஸ்டரைத் திறந்தாள். ரங்கநாதன் பெயருக்கு முன்னால் 'எஸ்' என்ற எழுத்து கரகரப்பட்டது. அவன் தந்தையின் பெயர்? ரங்கநாதன் சீதாராமனின் பிள்ளையா?' அவள் மனம் வேறு திசையிலும் திரிந்தது. 'எஸ்' என்ற எழுத்தைக்கொண்டு இத்தனை மனக்கோட்டை கட்டுவதா? சீதாராமனுக்குப் பதிலாக, அது செல்வராஜாக இருந்தால், அல்லது எஸ் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் வேறு பெயராயிருந்தால்?.....' அவள் வெகுநேரம் யோசிக்க வில்hை . 'ரங்கநாதன்! உன் தந்தையின் பெயர் என்ன?” என்று. தோரணையோடு கேட்டாள்.

  • சீதாராமன்!" என்றான் ரங்கநாதன். .

' நிர்மலாவுக்கு ஒரு நிவர்த்தி; அதே சமயம் உடம்பில் மெல்லிய அதிர்ச்சியும் கண்டது. அந்த அதிர்ச்சியால், வாயடைத்துப்போய் பேசாமல் இருந்தாள். ' ' ** என் தந்தை உங்களுக்குத் தெரிந்தவரா?" என்று கேட்டான் ரங்கநாதன், ' 'இல்லை. கேட்டேன்” என்று மழுப்பினாள் நிர்மலா. அவளுக்குப் பாடம் சொல்லித்தரவே ஓட்டவில்லை. முதல் , தாளே மாணவர்கள் தன் போதனா சக்தியைப்பற்றித் தவறாக எண் ணிவிடக் கூடாதே என்று பயந்தாள். நல்ல வேளையாக மணி அடித்தது. நிர்மலா எழுந்து சென்றான்., விட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எனவே காலார் நடந்துவந்தால், அதனால் தோன்றும் களைப்பினாலாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/72&oldid=1270248" இலிருந்து மீள்விக்கப்பட்டது