பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசங்கு சொர்க்கம் - 7} மனமும் உடலும் அயர்ந்துவிடாதா என்று நினைத்து வெளியில் கிளம்பினாள். செல்லும் வழியில், ஒரு சினிமா விளம்பரம் கண்ணை இழுத்தது. காதலர்கள் இருவர் ஒருடலாய் ஒன்றி நின்று அதரபானம் உறிஞ்சி நின்ற சித்திரம் அது. நிர்மலா அந்தச் சித்திரத்தை ஏனோ வெறித்துப் பார்த்தாள். முன்னெல்லாம் இந்த மாதிரிப் படத்தைக் கண்டால் கூட, பார்க்காதது, மாதிரி நடந்து விடுவாள். தன்னையுமறியாமல் அவள் கால் உக்கிங் ஆபீசில். கொண்டு நிறுத்தியது. 11 எந்தப் படமானால் - என்ன? டெ. லாழுது போக வேண்டுமே!” என்று தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டாள். அதில் சமாதானம் கண்டுகொண்ட மாதிரி, தன்னைத் தானே' ஏமாற்றிக்கொண்டாள். . அது *காரிருளில் ஒரு கன்னிகை' என்ற ஆங்கிலப் படம். ஒரு பிரபல நாடகாசிரியரின் கதையைத் தழுவியது. அது ஒரு பெண்ணின் கதை. அவள் ஒரு பத்திரிகை ஆசிரியை, காதலற்ற வாழ்வு வாழ்வதில் பெருமை கொண்டு, கன்னி யாகவே வாழ்ந்து வந்தாள். ஆனால், வாழ்க்கையோ, அது மட்டும் இருந்தால் போதுமா? என்று கேட்டது. அவளுக்கு ஒரு கணவன், ஒரு காதலன் தேவைப்பட்டான். தொழில், முறையில் அவள் வெற்றி கண்டவள் தான்; என்றாலும் வாழ்க்கையில் காதலும் முக்கியமானது என்பதை அவள் மறந்துவிட்டாள். அதன் பலன் விபரீதமான மனப் போராட்டங்கள், போராட்டங்களுக்கு முடிவு திருமணம்....... படம் முடிந்தது. எழுந்து வரும் வரையில், நிர்மலா, வக்கு அந்தப் படத்தின் மீது எந்த துவேஷமும் ஏற்பட வில்லை. வெளியில் வந்தவுடன் ஏதோ தன்னையறியாமல் ஒரு துவேஷம் அவள் மனசில் கிளைவிட்டது. காரணம், அவள் தனது பிரதிபிம்பத்தை அந்தக் கதா நாயகியிடம் கண்டாள். ஆனால், அவளைப்போல்" தானும் தோல்வியை ஏற்கவா?... .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/73&oldid=1270249" இலிருந்து மீள்விக்கப்பட்டது